Featured Home (TOP)

Recent Comments

Sunday, March 22, 2015

Unknown

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டி

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டி 21-03-2015 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இக் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் சார்பில் மட்டக்களப்பு ஏ அணியும்,மட்டக்களப்பு பீ அணியும் திருகோணாமலை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் சார்பில் திருகோணாமலை அணியும் மோதின.

இதன் இறுதிப் போட்டிக்கு மட்டக்களப்பு ஏ அணியும் திருகோணாமலை அணியும் தெரிவு செய்யப்பட்டது. இதில் திருகோணாமலை அணி வெற்றி பெற்றது.


இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு முதலாவது இடத்தையும்,இரண்டாவது இடத்தையும் பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கிண்ணத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளரும், மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் தலைவருமான பொறியியலாளர் வை.தர்மரட்ணமும் , வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திருகோணாமலை மாவட்ட பிரதம பொறியியலாளர் ரீ.மோகனதாஸூம் வழங்கி வைத்தனர்.

இவ் சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் ரீ.பத்மராஜா,சிரேஷ்ட பொறியியலாளர் ஜெயபாலினி தர்மரட்ணம் , மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கான என்.சசினந்தன்,ஏ.லிங்கேஸ்வரன்; ,உதயசங்கர்.எம்.ஏ.வாதுளன்,ஏல்.எம்.சதாத் ,மட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகார சபையின் சிரேஷ்ட கணக்காளர் சுஹைர் உட்பட ஊழியர் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :