Featured Home (TOP)

Recent Comments

Friday, March 20, 2015

Unknown

(-எம்.எச்.எம்.அன்வர்-)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கல்வி அபிவிருத்திச்சபை  வருடாந்தம் நடாத்தும் சாதனையாளர்கள் பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் இவ்வருடமும் இடம்பெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின்  செயலாளர் அஷ;nஷய்ஹ் ஏ எல் எம் சபீல் நளீமி தெரிவித்தார்


எதிர்வரும் சனிக்கிழமை (21.03.2015) ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் சென்ற முறை தரம் 5  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், மூத்த சமூக சேவையாளர்கள் மற்றும் கல்விமான்களும் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித்தலைவர் சட்டத்தரணி ஏ எல் அப்துல் ஐவாத் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார.;

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :