Featured Home (TOP)

Recent Comments

Saturday, March 21, 2015

Unknown

கந்தூரி


-எம்.எல்.எம்.அன்ஸார்

இன்னம் கொஞ்ச நேரத்தில முகில்கள் பெரிய கந்தூரி குடுக்கப் போகுது. வானத்தில தஹரா ராத்திப்பு அடிக்கிற சத்தம் என்ன உரமா கேக்குது தெரியுமா.


மின்னல் நாலஞ்சி அடுப்பு மூட்டி இறச்சிக் கறி ஆக்கி தாழிச்சிக் கொட்டுற மணம் ஊரெல்லாம் என்னமா பரவுது. விடியக் காலத்தால சுபஹுக்கே கூதக்காத்து கொடியேத்தி வெச்சயாம்.

கொஞ்ச நாளா புரியாணி மாதிரி ருசியான தீன் இல்லாம வாயூறிக் கிடந்த மரங்களும் மண்ணும் நார்ஸா சோறு வாங்க உழுந்தடிச்சிக் கொண்டு இப்பயே தயாராகிட்டுகள்.
மத்தியானமும் ஆயிட்டு, புதுனம் பாக்கிறத்திக்காவது சூரியன் தெருவுக்கு வரலியே. இப்பிடியான நல்ல நாள்ல அது இஸ்டமில்லாமத்தான் எப்பயும் இரிக்கும். சில வேள தெளஹீத் வாதியா இரிக்கிமோ தெரியா. நமக்கெதுக்கு ஊருபலாய். உட்டுடுவம்.
இப்ப ராத்திப்பு மஜ்லிஸில ஹால் ஒழும்பிட்டாக்கும். தஹரா துண்டு துண்டா உடஞ்சி தவண்டு வானத்தில இருந்து கீழ உழுகிற மாதிரி செரியான சத்தம் கேக்குது.
மேகம் முரீதீன் கூட்டமா வந்து மணக்குச்சி கொளுத்தி வெச்சி பாத்திஹாவும் ஓதிட்டுப் பெய்த்து. மூசாப்பு இருட்டு தமாம் செஞ்சி முடிச்சி கொள்ள நேரம். என்னயோ தெரியா கந்தூரிச் சோறு பகிர சுணங்குது.
எப்பிடியும் ளுஹருக்கு வாங்கு செல்றத்திக்கு இடயில குடுத்துடும். முகில்கள் சோத்துப் பொட்டிய அவசர அவசரமா தூக்கிட்டுப் போறது அன்னா தெரியிது.

-எம்.எல்.எம்.அன்ஸார்

14.06.2014

     






 



Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :