Featured Home (TOP)

Recent Comments

Tuesday, March 31, 2015

Unknown

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு NFGG அனுப்பிய கடிதத்திற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பிய மறுப்புக் கடிதத்தின் தமிழாக்கம்

                                                                                                                                              (முகவாி)
அம்மணி

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் (பா.உ.) தொடர்பாக

இல. 10/18, லேக் வீதி, கொழும்பு 8 இல் வசிக்கும் பா.உறுப்பினரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எனது கட்சிக்காரரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பின் வரும் விடயங்களை உங்கள் கவனத்திற்கு எழுதுகின்றேன்.

01 நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நபர்களினால் (அவ்வாறான ஒரு அமைப்பு இருப்பதாக நாம் ஏற்றுக் கொள்ளவில்லை) எனது கட்சிக்காரர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டும் முறைப்பாடொன்றினை 11.03.2015 ஆம் திகதியளவில் சமர்ப்பித்துள்ளார்கள்.


02 இந்த விடயம் பின்வரும் ஊடக செய்திகளின் மூலமாக எனது கட்சிக்காரருக்கும் தெரிய வந்துள்ளதுடன் இதனை குறித்த நபர்களே திட்டமிட்டு செய்திருக்கின்றார்கள் எனவும் நாம் கருதுகின்றோம்.

01Virakesary on        12.03.2015
2 Thinakural on        12.03.2015
3Tamilmirror on     18.03.2015
4 Battinews.com      18.03.2015
5 Vidiveli.lk on       18.03.2015
6 Jaffnamuslim on   18.03.2015
7 Tamilwin.com on 18.03.2015
8 Newceylon.lk on 18.03.2015
9 Madawalanews.com on 18.03.2015
10 Your kattankudy.com on 18.03.0215



03 இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படைகளோ ஆதாரங்களோ அற்றவை என எனது கட்சிக்காரர் மிகத் தெளிவாக மறுத்துரைப்பதோடு இது, குறித்த நபர்களினால் எனது கட்சிக்காரரின் நற்பெயரையும் அரசியல் இருப்பையும் சேதப்படுத்துவதற்காக செய்யப்பட்டிருக்கிறது. 

04 இந்த விடயத்திற்கு உள்ளு}ர் ஊடகங்களில் கிடைத்திருக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கின்றபோது இந்த முறைப்பாட்டைச் செய்திருக்கும் நபர்கள் எனது கட்சிக்காராரின் தேர்தல் தொகுதிகளிலும் அவரை அவமானப்படுத்தி அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு தீங்கு உண்டு பண்ண வேண்டும் என்ற கெட்ட நோக்கத்திலேயே இதனைச் செய்திருக்கின்றார்கள்.

05 இந்த மோசமான நடவடிக்கை காரணமாக எனது கட்சிக்காரருக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பு ஏற்பட்டிருப்பதோடு இந்த சட்டத்திற்கு முரணான நோக்கத்திற்காக குறித்த நபர்கள் உங்களது நிறுவனத்தையும் துஸ்பிரயோகம் செய்திருக்கிறார்கள்.

மேற் சொன்ன காரணங்களின் அடிப்படையில் எனது கட்சிக்காரருக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நிரூபிப்பதற்கான உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணிவுடன் கோருவதுடன் உங்களது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ய முயன்றிருக்கும் குறித்த நபர்களின் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு எதிராக உங்களது நிறுவனம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகிறோம்.

இது தொடர்பில் உங்களை எனது கட்சிக்காரருடன் வந்து கதைப்பதற்கு வசதியான நேரமொன்றையும் ஒதுக்கித்தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வேண்டுகோளானது எனது கட்சிக்காரரின் கோரிக்கைக்கமைவாக சட்டமா அதிபர், சபாநாயகர் மற்றும் ஊடகங்கள் என்பனவற்றுக்கு அவர்களின் தகவல்களுக்காகவும், தேவையான நடவடிக்கைகளுக்காகவும் பிரதியிடப்படுகிறது.

உங்கள் உண்மையுள்ள

ஓப்பம்

ஆங்கிலக் கடிதத்தை இந்த இணைப்புக்கு சென்று பாா்வையிடலாம்




Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :