க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2014 ஆம் ஆண்டின் பெறுபேறுகள் தற்பொழுது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையில் நடைபெற்ற பரீட்சையின் பெறுபேறுகளே இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஐந்து லட்சத்து 77 ஆயிரத்து 220 பேர் இப்பரீட்சைக்கு முழு இலங்கையிலிருந்தும் தோற்றியிருந்தனர்.
இதேவேளை, கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுற கல்வி வலய பாடசாலைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று காலை 10.00 மணி முதல் பரீட்சைத் திணைக்கள பெறுபேறுகள் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய பாடசாலைகளின் பெறுபேறுகள் இன்று தபாலிடப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
