Featured Home (TOP)

Recent Comments

Tuesday, March 17, 2015

Unknown

”வார உரைகல்” பத்திாிகை பிரதம ஆசிாியருக்கு மட்டு.மாவட்ட UNP அமைப்பாளாிடமிருந்து அச்சுறுத்தல்

காத்தான்குடியைத் தளமாகக்கொண்டு கடந்த பத்தாண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘வார உரைகல்’ பத்திரிகை ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வை, ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சசிதரன் என்பவர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 13.03.2015ம் திகதி வெளியான இப்பத்திரிகையில், ‘ஐ.தே.க.வின் காத்தான்குடி அமைப்பாளருக்கு எதிராக கட்சியின் செயலாளர் கபீர் ஹாஸிமிடம் முறைப்பாடு’ எனும் தலைப்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சமர்ப்பித்திருந்த முறைப்பாடு ஒன்று செய்தியாகப் பிரசுரமாகி இருந்தது.
அதனைக் கண்ணுற்ற மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் சசிதரன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபரொருவர், இன்று காலை 08:10 மணிக்கு அவரது 0777575477 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வுடன் தொடர்பு கொண்டு குறித்த செய்தி வெளியிட்டமை தொடர்பில் அவர்மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும், கவனமாக இருக்குமாறும் கடுமையான வாhத்தைப் பிரயோகங்களுடன் அச்சுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் குறித்த நபருடன் அல்லது அவரது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விசாரணை நடாத்தி அவரது அச்சுறுத்தல்களிலிருந்து நிவாரணம் பெற்றுத் தருமாறு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் தமிழ்ப்பிரிவுக்கான விசாரணை அதிகாரி அல்ஹாஜ் எம்.எஸ். அமீர் ஹுஸைன், சிறி லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் கபீர் ஹாஸிம் ஆகியோரிடம் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :