Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 14, 2015

Unknown

மட்டு -மாவட்ட இளைஞர் கழக சம்மேளன நிருவாகத் தெரிவுக் கூட்டத்தில் - ஓட்டமாவடி பிரதேச சம்மேளன நிருவாகிகள் எவரும் பங்கேற்கவில்லை.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் புனரமைப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (11) சனிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பணிமனையில் இடம்பெற்றது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி இம் மாவட்ட சம்மேளனம் அமையப்பெறும். கிராம மட்டங்களில் அமைக்கப்படும் இளைஞர் கழகங்களில் இருந்து பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச சம்மேளனம் செயற்திறன் மிக்க இளைஞர்களை கொண்டு நிறுவப்பட்டு மாவட்ட சம்மேளன நிருவாக தெரிவிற்காக தலைவர், உபதலைவர், உபசெயலாளர்,பொருளாளர்,அமைப்பாளர்,உப அமைப்பாளர் என்ற அடிப்படையில் பிரதான ஆறு அங்கத்தவர்கள் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
 
இவ்வாறாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து 14ஒ6ஸ்ரீ84 என்பத்தி நான்கு இளைஞர்கள் பங்கு பற்றி மாவட்ட சம்மேளனத்தை தெரிவு செய்வர்.
 
இவ்வாறு அமைக்கப்படும் நிருவாக தெரிவுக்குழுக் கூட்டத்திற்கு ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தில் இருத்து எந்தவொரு முக்கிய நிருவாக அங்கத்தவரோ அல்லது அப் பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் இளைஞர் சேவை அதிகாரியாகவும் பிரதேச சம்மேளனத்தின் செயலாளராகவும் கடமையாற்றிவரும் இளைஞர் சேவை அதிகாரியோ அங்கு பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :