நுகர்வோர்கள் பொருட்களின் நிறையை சரியாக தெரிந்து கொளளும் பொருட்டு விசேட திட்டமொன்றை மே மாதம் முதல் அமுல்படுத்தவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் கொள்வனவு செய்யும் பொருட்கள் அவர்கள் வழங்கும் பணத்திற்கு ஏற்றவாறு இல்லை எனவும், அவற்றின் எடை மிகக் குறைவாக காணப்படுவதாகவும் நுகர்வோரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இந் நடைமுறை அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்ட
மாக வர்த்தகர்களுக்கும் நுகர்வோருக்கும் இது தொடர்பில் தெளிவுப்படுத்தபடவுள்ளதுடன், இரண்டாம் கட்டமாக பிரத்தியேக தராசு ஒன்றை நாடளாவிய ரீதியிலுள்ள விற்பனை நிலையம், மற்றும் வெதுப்பகங்களில் வைப்பதைக் கட்டாயப்படுத்தும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
