Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 21, 2015

Unknown

காத்தான்குடி சம்மேளன கல்விக்குழு மறு சீரமைப்பு

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதான குழுக்களில் ஒன்றான கல்வி அபிவிருத்தி குழு மறு சீரமைக்கப்பட்டுள்ளதாக கல்வி குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமைச்சர் றவுப் ஹக்கீமின் இனணப்பு செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

காத்தான்குடி சம்மேளனத்தின் கல்விக் குழுவின் ஏற்பாட்டில் சாதனையாளர்கள் பாராட்டு நிகழ்வினை அடுத்து நடைபெற்ற வாராந்த கூட்டத்தில் கல்வி குழுவின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளையும் எதிர்காலத்தில் கல்விக்குழு சிறப்பாக செயல்படுவதன் அவசியத்தையும் யூ.எல்.எம்.என்.முபீன்  பின்வருமாறு வலியுறுத்தினார்.

நீண்ட காலமாக செயல்பட்டு வரும் சம்மேளன கல்விக்குழு சம்மேளனத்தின் பிரதி தலைவர் ஏ.எல்.ஏ. ஜவாத் (சட்டத்தரணி) தலைமையில் ஆரம்ப காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவும் யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் காத்தான்குடி கல்விக்குழுவின் செயல்பாடுகள் மந்தம் அடைந்துள்ளது. வருடாந்தம் சாதனையாளர்கள் கௌரவம் O/L, A/L  பெறுபேறுகளில் திறமை காட்டியவர்கள் ஜூம்ஆ தொழுகையின் பின் கௌரவித்தல் என்கின்ற பணிகளோடு தன்னை சுருக்கிக் கொள்வதாக யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.

சில கல்விக்குழு அங்கத்தவர்கள் கூட்டங்களுக்கு கூட சமூகமளிப்பதில்லை.. கடந்த காலங்களில் கல்விக் குழுவில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் அமுல்படுத்தப்படாமல் உள்ளது.

எனவே கல்விக்குழு மீளாய்வு செய்யப்பட வேண்டும்  அத்துடன் இந்த ஊரின் தாய் நிறுவனமான சம்மேளனத்தின் இயலுமைக்கும் பலத்திற்கும் ஏற்ப மிக அவசிய தேவையான கல்வி நிலை சற்று ஆரோக்கியமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.

சாதாரண அமைப்புகளைப்போல் சம்மேளன கல்விக் குழு இயங்க முடியாது. கல்விக் குழுவின் செயல்பாடுகள் பரவலாகி விரிந்து செயல்படல் வேண்டும் என்ற கருத்தையும் யூ.எல்.எம்.என். முபீன் சபையில் முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து சபையில் நீண்ட கருத்து பரிமாறல்களின் பின்னர் இறுதியில் பின்வருபவர்களைக் கொண்ட கல்விக் குழுவினை மீழாய்வு செய்வதற்கான குழு நியமிக்கப்பட்டது. 

1. யூ.எல்.எம்.என்.முபீன் BA/PGDE
2. ஏ.எல்.ஏ.ஜவாத்  BA/LLB
3. எம்.ஜ.எம்.சுபைர் Rt/CC
4. ஏ.எல்.சபீல் (நழீமி) BA
5. எம்.ஜ.எம்.உசனார் BA     ஆகியோர்  நியமிக்கப்பட்டனர். 

மேற்படி குழு கடந்த 23.3.2015 அன்று கூடியது.
சம்மேளன கல்விக்குழவினை மீளாய்வு செய்வது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து பின்வரும் அமைப்பில் கல்விக்குழு மீளமைக்கப்படல் வேண்டும் என்ற தனது  அறிக்கையினை தயாரித்து திட்ட முன்மொழிவை முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீன் முன் மொழிந்தார். 

இத்திட்ட முன் மொழிவு சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்வரும் அமைப்பில் கல்விக் குழு மறுசீரமைக்கப்;பட வேண்டும் என சபை தீர்மாணித்தது.

மறுசீரமைக்கப்பட்ட கல்விக் குழவின் விபரம்.

1. காத்தான்குடி சம்மேளன தலைவர்,செயலாளர்,
2. கல்விக்குழுவின் தலைவர்.
3. மட்டக்களப்பு மத்தி கல்வி வலய காத்தான்குடி சார்பாக பணியாற்றும் பதவி வழியாக பணியாற்றும் பிரதி கல்விப்பணிப்பாளர்.
4. பதவி வழியாக காத்தான்குடி கோட்டக்கல்வி பணிப்பாளர்.
5. மட்டக்களப்பு மத்தி வலயத்தில் பதவி வழியாக பணியாற்றும் ஆரம்ப கல்விப் பிரிவு உதவி கல்விப் பணிப்பளர்.
6. காத்தான்குடி சார்ந்த சேவைக்கால அதிபர்கள், ஆசிரியர்கள்,
7. சம்மேளன கல்விக்குழுவில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர்கள்.

மேற்படி சிபார்சு அறிக்கை கடந்த 29.03.2015 சம்மேளன நிர்வாக கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு சபை ஏற்றுக்கொண்ட கல்விக்குழு தற்போது சிறப்பாக இயங்கத் தொடங்க உள்ளது. 

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :