Featured Home (TOP)

Recent Comments

Saturday, April 4, 2015

Unknown

கவிமணி தலைமையில் கலாசார நிகழ்வு காத்தான்குடிசம்மேளனத்தில்

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்களின் சம்மேளன கலை கலாச்சார பிரிவின் ஏற்பாட்டினில் முதலாவது கவியரங்கு சம்மேளன அஷ் ஷஹீட் அஹமடலெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் கவிமணி எம்.எச்.எம்.புஹாரி(பலாஹி) தலைமையில் நடைபெற்றது.

காத்தான்குடி சம்மேளன  கலாச்சார பிரிவின் ஏற்பாட்டினில் இடம் பெற்ற இக்கவியரங்கம் 'முறையீடு' எனம் தலைப்பில் கவிஞர் பெருமக்களால் கவி பாடப்பட்டது.


சிந்தனைக்கு விருந்தாகவும் சீர் கேடுகளுக்கு மருந்தாகவும் அமைந்த இக்கவியரங்கு மிகவும் சிறப்பாக இடம் பெற்றதுடன் இக்கவியரங்கில் முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், அமைச்சர் றவூப் ஹக்கீம் இன் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபீன் உட்பட கவிஙர்கள், கல்வி; மான்கள், சமூக ஆர்வலர்கள்,சம்மேளன உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கவியரங்கின் தலைவர் கவிமணி எம்.எச்.எம்.புஹாரி(பலாஹி) இன் கவிநயத்தால் நிகழ்வு சிறப்பாக பார்ப்பவர்க்கு விருந்தாக அமைந்திருந்ததுடன் காத்தான்குடியைச் சேர்ந்த 08 கவிஞர்களின் கவிதையால் கவியரங்கு  நனைந்ததினையும் காணக்கூடியதாக இருந்தது
.
இறுதியாக இக்கவியரங்கின் சிறப்பு தொடர்பாக அதிபர் எஸ்.எல்.ஏ.கபூர், பிரகாசக் கவி அன்வர் ஆகியோரின் கருத்தக்களும் தெரிவிக்கப்பட்டது








Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :