Featured Home (TOP)

Recent Comments

Thursday, April 9, 2015

Unknown

உடுகம ஸ்ரீ புத்தரக்பித்த தேரரின் மறைவுக்கு ஜம்இய்யத்துல் உலமா அனுதாபம்

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்பித்த தேரரின் மறைவுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது.
அவ்வமைப்பு விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது.

நீதி, நியாயம் மற்றும் ஒழுக்கத்தை மதிக்கும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு பாரிய பிரயத்தனத்தை  முன்னெடுத்து வந்த தேரரின் மரணம் நாட்டின் முக்கிய காலகட்டத்தில் பெரிய இடைவெளியாகும்.
இவர் நாட்டில் மத நல்லிணக்கத்துக்காக ஆற்றிய சேவைகளை இத்தருனத்தில் கௌரவத்துடன் நினைவு கூர்கின்றோம். இவரின் வழி காட்டல்களை தொடர்ந்தும் முன்னெடுத்து சமாதானமான, நல்லிணக்கத்துடன் கூடிய தாய் நாட்டைக் கட்டியெழுப்பவேண்டியது, இந்நாட்டின் சகல பிரஜைகளினதும் தார்மீகப் பொறுப்பாகும் எனவும்  அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது. (மு)
(ஜுனைட்.எம்.பஹ்த்)

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :