Featured Home (TOP)

Recent Comments

Sunday, April 5, 2015

Unknown

கலாச்சார விழாவும், நிந்தவூர் வரலாறும் வாழ்வியலும் நூல் வெளியீட்டு விழா.

(முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்.)


நிந்தவூர் பற்றிய வரலாற்றைத் தெரிவிக்கும்' நிந்தவூர் வரலாறும் வாழ்வியலும்' நூல் வெளியீட்டு விழா இன்று 2015.04.04 பி.ப.3.30 மணியளவில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில்,பிரதேச செயலாளர் ஜனாபா.ஆர்.யூ.அப்துல் ஜலீல் அவர்களது தலைமையில் நடைபெற்றது

இவ்விழாவில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சரும்,முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான அல்ஹாஜ்.எம்.ரி.ஹஸன் அலி அவர்களும், கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.எம்.சி.பைசால் காசீம் அவர்களும், மாகாண சபை உறுப்பினர் கௌரவ.ஆரிப் சம்சுதீன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.


மேலும் இவ்விழாவுக்கு விஷேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட செயலாளர் திரு.துசித்த பீ.வணிகசிங்க அவர்களும், மேலதிக மாவட்ட செயலாளர்களான திரு.கே.விமலநாதன், மேலதிக மாவட்டசெயலாளர்  ஜனாப்.எம்.ஐ.அமீர், கலாச்சார அலுவலக திணைக்கள பணிப்பாளர் திரு.D.U.W.விக்கிரம ஆராச்சி மற்றும் சம்மாந்துறை, சாய்ந்தமருது, ஏறாவூர் செயலக பிரிவின் செயலாளர்களும் வருகை தந்து சிறப்பித்துள்ளார்கள்.






Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :