எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்ள ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்தவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு அமைச்சுப் பதவியை வழங்கியமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் விசாரணை நடத்தவே மஹிந்த அழைக்கப்பட்டுள்ளார்.
எனினும், என்ன முறைப்பாடு யார் முறைப்பாடு செய்தார் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
