Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 14, 2015

Unknown

வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் நிகழ்வு.-மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, வாகரை, சந்திவெளிப் பிரதேசத்திலுள்ள கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று வாகரைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம் பெற்றது.

வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தை, மகளீர் விவகார, கிராமிய மின்சார, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சத்துணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்புப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், வாகரைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எஸ்.கே.ஏ.பி.திசாநாயக்க, அமைச்சரின் பொது மக்கள் தொடர்பதிகாரி
யூ.எல்.பஸீர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மொத்தம் 1000 தாய்மாருக்கு ஒரு மாதத்திற்கான சத்துணவாக ரூபாய் 2000 பெறுமதியான சத்துணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இன்னும் 09 மாதங்களுக்கு இவ்வாறான பொதிகள் வழங்கி வைக்கப்படுமென பிரதேச செயலாளர் தெரிவித்தார்.




Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :