Featured Home (TOP)

Recent Comments

Monday, April 27, 2015

Unknown

கல்விமானை கௌரவிக்கும் சிறப்புமிக்க நிகழ்வு காத்தான்குடி சம்மேளனத்தில் இடம் பெற்றது



(ஏ.எல்.டீன்பைரூஸ்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கல்விமான் எம்.ஜ.சேகுஅலி(SLEAS)அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அன்மையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்களின் சம்மேளனத்தில் தலைவர் எம்.ஜ.எம். சுபைர் jp(Rt-cc) தலைமையில் நடைபெற்றது.

சம்மேளனத்தின் தலைவர்,செயலாளர்,சம்மேளன கல்விக்குழுவின் செயலாளர் எஸ்.எல்.ஏ.கபூர் Bcom ,சம்மேளன உறுப்பினர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர்கள்,உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சம்மௌனத்தின் தலைவர் எம்.ஜ.எம்.சுபைர் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம்அஷ்ய்ஹ் ஏ.எல்.எம்.சபீல்(நழீமி)   அவர்களினால் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்களின் சம்மேளனமும் அதன் கல்விக்குழுவும் ஆற்றிவரும் மகத்தான பணிகள் தொடர்பாகவும்  மிகவும் சுருக்கமாகவும் உருக்கமாகவும் பெசினார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளரின் பூரன ஒத்துழைப்புடன் எதிர்காலத்தின் மேற்கொள்ளப்படவுள்ள முக்கியமான சில வடயங்களை  அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல்(நழீமி) சுட்டிக்காட்டினார்.

1. ஆரம்ப கல்வி மாணவர்கள் கல்வி விடயத்தில் தோற்றுப் போகும் நிலை உருவாகியுள்ளது. அதற்கான வேளை திட்டங்களை மேற்கொள்ளல்.
2. மூன்றாம் ஆண்டில் பரீட்சை ஒன்றை நடாத்துதல். அதன் போது மாணவர்களை இணங்கன்டு அவர்களை ஊக்கப்படுத்த முயற்சி செய்தல்.
3. ஆசிரியர் பற்றாக்குறை விடயத்தை  நிவர்த்தி செய்தல்.
4. வேளிப்பிரதேசங்களை சேர்ந்த பல ஆசிரியர்களின் பூரன ஒத்தளைப்பு பாடசாலைகளுக்கு கிடைப்பதில்லை. 100 பயன்பாடுகளும் இல்லை  எனவே            இது தொடர்பில் கவனம் செலுத்தல்.
5. பல்கலைக்கழக அனுமதிக்காக (Z  SCORE) புள்ளிகளை அதிகம் பெறக்கூடிய புதிய பாடங்களை உள்வாங்க முயற்சி எடுத்தல்.
6. கனிசமான புள்ளிகளை பெறாத மாணவர்களை சித்தி பெற செய்வது தொடர்பில் கவனம் செலுத்தல்.
7. பாடசலை புதிய மாணவர்கள் அனுமதி தொடர்பில் அதிபர்கள்,பாடசாலை எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தல்

மேற்படி விடயங்கள் தொடர்பில் காத்தான்குடி சம்மேளன கல்விக்குழு வலய,மாகாண, மதிய அரசு மட்டத்தின் ஊடாக தீர்வு காண இருப்பதாகவும் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல்(நழீமி) கூறினார்.

இதன் போது புதிய கல்விப்பணிப்பாளர் எம்.ஜ.சேகுஅலி அவர்களை காத்தான்குடி சமூகம் சார்பாக கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.

சம்மௌனத்தின் பிரதி தலைவர் ஏ.எல்.அப்துல் ஜவாத் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஜ.எம். சுபைர் அவர்களினால் நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வின் பிரதம அதிதி வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ்எம்.ஜ. சேகு அலி உரையாற்றுகையில்...

காத்தான்குடி சம்மௌனத்தின்; செயல்பாடுகளை பார்த்து நான் மிகவும் சந்தோசப்படுகின்றேன் பாராட்டுகின்றேன். சம்மௌனத்தின் கல்விக்குழ எடுத்திருக்கும் மேற்படி தீர்மாணங்களைப் பார்க்கின்ற போது எனது பணிகளை கோட்ட மட்டத்தில் மேலும் சிறப்பாக செய்ய இவ்வாறான செயல்பாடுகள் நிச்சயம் உதவும் என்பது எனது கருத்தாகும்..

காத்தான்குடி கல்விக் குழு எடுக்கின்ற ஒவ்வொரு விடயத்திற்கும் எனது பூரண ஒத்துழைப்பு என்றும் உண்டு என்பதுடன் நான் இரவு பகல் பாராது உங்களுடன் இனைந்து பணி செய்ய காத்திருக்கின்றேன் என்றும் தெரிவித்தார்;. 

ஆரம்ப கல்வி விடயத்தில் நானும் என்னோடு இனைந்த உதவி கல்விப்பாளர்களும் இணைந்து எதிர்காலத்தில் பணிசெய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

காத்தான்குடி சம்மௌன கல்விக்குழு பலமாக உள்ளதால் பாடசாலை மட்ட பிரச்சினைகளை மாகான பணிப்பாளருடனான சந்திப்பை எற்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வ காணமுடியும் என்றும் தெரிவித்தார்.

சம்மேளன கல்விக்குழு ஆக்கமும் ,ஊக்கமும் தரும்போது நாம் எமது நோக்கத்தை அடைந்து கொள்ள முடியும் எனவும் மட்டக்களப்ப மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர்  கௌரவ அல்ஹாஜ்  எம்.ஜ.சேகுஅலி (SLEASதெரிவித்தார்.





Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :