புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - NFGG ஊடகப்பிரிவு,

காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் மாற்றியமைக்கக் கோரும் "மக்கள் அழுத்தப் போராட்டம்" ஒன்றினை நாளை காலை 09.00 மணிக்கு காத்தான்குடி நகரசபை முன்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்னெடுக்கவுள்ளது.
இது தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வரையரைக்குட்பட்ட வகையில் நூதனசாலையை மாற்றியமைக்கக் கோரி நகர சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையும், மக்கள் அழுத்தப் போராட்டமும்
காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதன சாலை இஸ்லாமிய வரையறைகளுக்கு விரோதமான வகையில் அமைக்கப்பட்டுள்ளமை பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்களையும் விசனங்களையும் தோற்றுவித்துள்ளது. இது தொடர்பான கண்டனங்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றும் வருகின்றன.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, தஃவா அமைப்புக்கள் என்பன, இங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள் அகற்றப்பட வேண்டும் எனவும், இஸ்லாத்தில் இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் மிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்த நூதனசாலையை அமைப்பதற்கு இடம் மற்றும் அனுமதி என்பனவற்றினை வழங்கிய காத்தான்குடி நகரசபை இது தொடர்பில் பாராமுகமாக செயற்படுவதனையிட்டு நாம் வேதனைப்படுவதோடு, இது தொடர்பாக கடந்த 23.04.2015 அன்று இடம்பெற்ற நகரசபை அமர்வின் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) நகரசபைப் பிரதிநிதிகளால் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றக் கோரும் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
எனினும் மேற்படிக் கூட்டத்தில் அப்பிரேரணையை ஏற்கமறுத்த நகரசபைத் தவிசாளர், எமது பிரதிநிதிகளின் தொடர்ச்சியான அழுத்தத்தம் காரணமாக அடுத்த சபை அமர்வில் அதனைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக உறுதியளித்திருந்தார்.
எனினும் நாளை 13.05.2015 புதன்கிழமை நகரசபை அமர்வு இடம்பெறவுள்ளது. இவ்வமர்வு தொடர்பாக எமது மக்கள் பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் இப்பிரேரணை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. எதிர்வரும் 15.05.2015ம் திகதியுடன் உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில் காத்தான்குடி நகரசபையின் இறுதி அமர்வாகக்கூட இக்கூட்டம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளைய சபை அமர்விலும் இது தொடர்பான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாதவிடத்து இதன்பின்னர் இவ்விவகாரம் தொடர்பில் நகர சபைக்கூடாக எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாமல் போகலாம்.
எனவே, நாளை நடைபெறவுள்ள மக்கள் பிரதிநிதிகளின் கூட்டத்தில் இப்பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றி உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு நகரசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அழுத்தம் கொடுக்குமாறு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், தஃவா அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும், இது தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நாளை (13.05.2015) காலை 09.00
மணிக்கு காத்தான்குடி நகரசபை முன்பாக ஏற்பாடு செய்துள்ள 'இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் காத்தான்குடி நூதனசாலையை மாற்றியமைக்கக் கோரும்' 'மக்கள் அழுத்தப் போராட்டத்தில்' அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அன்புடன் அழைக்கிறோம்.
NFGG
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
National Front for Good Governance
காத்தான்குடி நகரசபைக்கு NFGG மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணை:
'முஸ்லிம்களின் தொன்மைகளை வெளிக்காட்டும் நோக்கில் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள நூதனசாலை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இது இஸ்லாமிய வரையறைகளை மீறாத வகையில் அமையப்பெற வேண்டுமென்பதே முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்தாகும். இந்நிலையில் அந்நூதனசலையில் வைக்கப்பட்டுள்ள உருவச் சிலைகள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு பாரிய விசனத்திற்கும் கவலைக்குமுரிய விடயமாகவும் மாறியிருக்கிறது.
மேற்படி விடயத்தின் பாரதூரத்தை அறிந்த நீங்களும் இதற்குரிய மார்க்கத் தீர்ப்பினை (பத்வாவினை) 30.03.2015ம் திகதிய கடிதம் மூலம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் கோரியிருந்தீர்கள். அதற்கமைவாக அவர்களும் 15.04.2015ம் திகதி அனுப்பிய கடித்ததில் 'முஸ்லிம்கள் உருவச்சிலைகளை வணங்கவோ, அவற்றை ஞாபகச் சின்னங்களாக வைத்திருக்கவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்றும் இது விடயத்தில் இஸ்லாம் மிகக் கடுமையான எச்சரிக்கையினை செய்துள்ளதாகவும்' மிகத் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளதோடு மேற்படி மனிதர்களை ஒத்த உருவச் சிலைகள் எக்காரணம் கொண்டும் வைக்கப்படக் கூடாது என்பதை தற்போது தங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
இருப்பினும், இஸ்லாத்துக்கு விரோதமானதென காத்தான்குடி உலமா சபையினாலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த உருவச்சிலைகள் அகற்றப்படாமலேயே தற்போது இந்த நூதனசாலை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி உருவச் சிலைகள் இஸ்லாமிய மார்க்க போதனைகளுக்கு முரணாக அமைந்திருப்பதோடு, எதிர்காலத்திலும் இதனைப்பின்பற்றி அந்நிய மதத்தினரைப் போலவே முஸ்லிம்களும் சிலைகளை அமைக்கின்ற மோசமான நிலைமையினை இது ஏற்படுத்தும் என உலமாக்கள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் கவலை கொண்டிருக்கிறார்கள்.
எனவே, காத்தான்குடி நூதனசாலையிலுருந்து மேற்படி உருவச் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எதிர்வரும் நகரசபை அமர்வில் மேற்கொண்டு அதற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இப் பிரேரணையினை சமர்ப்பிக்கிறோம்.'