கொடகே நிறுவனமும் இலங்கை வானொலியும் இணைந்து மூத்த எழுத்தாளர்களை கெளரவிக்கும் முகமாக நடைபெறும் விருது வழங்கும் விழா எதிர்வரும் 9 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், ஆனந்த சமரக்கோன் உள்ளக அரங்கில் நடைபெறும்.
வாழ்த்துக்களை போராசிரியர் தயா அமரசேகரவும், டாக்டர் தி. ஞானசேகரனும் வழங்குவர்.
விருது பெறும் 15 மூத்த எழுத்தாளர்களுள் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், திருமதி அன்னலெட்சுமி இராஜதுரை ஆகியோரும் அடங்குவர். ஏனயோர் சிங்கள எழுத்தாளர்களாவர்.
மே 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை மு. ப. 10 மணி முதல் இரவு 10 மணி வரை புத்தக கண்காட்சியும் நடைபெறுகின்றது.
(TTN - எமது செய்தியாளர்)
