Featured Home (TOP)

Recent Comments

Thursday, May 14, 2015

Unknown

வடிகான் பாலம் உடைந்ததனால் போக்குவரத்திற்கு மக்கள் சிரமம்.! நிந்தவூர் பிரதேச சபையின் கவனிக்குமா..?

(முகம்மட் ஜெலீல், நிந்தவூர்.)

நிந்தவூர் மூன்றாம் பிரிவு இமாம் ரூமி வீதியினூடாக குறுக்கே செல்லும் வடிகான் பாலமொன்று உடைந்ததனால் சுமார் மூன்றடி ஆழத்தில் குழி ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியினூடாக வாகனங்களிலும் சைக்கிள்களிலும் பயணிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டடுள்ளது.

மேலும் இவ்வீதில் ஏற்பட்டடுள்ள குழியின் காரணமாக பாடைசாலைக்கு செல்லும் மாணவர்கள்கூட கடும் சிரமத்துக்கு மத்தியில் அவதானத்தோடு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


அத்தோடு நிந்தவூர் வைத்தியசாலை வீதி புணரமைக்கப்படாதமையினால் வைத்தியசாலைக்கு நோயாளிகளை ஏற்றிச் செல்லும் "அம்பியுலன்ஸ்" வண்டிகள்கூட இவ்வீதியினூடகவே செல்லவேண்டிய நிலையில் உள்ளபோது இவ்வீதி தற்போது உடைந்து கிடப்பதனால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கவேண்டியுள்ளது.

ஆகையால் இது தொடர்பாக நிந்தவூர் பிரதேச சபை கவனத்தில் எடுத்துக்கொண்டு இவ்வீதியை உடனே புணரமைக்குமாறு மக்கள் சார்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 







Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :