Featured Home (TOP)

Recent Comments

Saturday, May 16, 2015

Unknown

தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் அமைக்க ஒத்­து­ழைக்­க­மாட்டோம்

பொதுத் தேர்­தலின் பின்­னரும் தேசிய அர­சாங்கம் அமை­வதை நாம் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். கூட்டு அர­சாங்­கத்­துக்கு இனி அவ­சியம் இல்லை. எனவே, பிர­தான தனிக் கட்­சியே ஆட்­சி­ய­மைக்க வேண்டும் என எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா தெரி­வித்தார்.
எமது பிர­தான எதிரி ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆவார். அவரை ஒன்­றி­ணைத்து எதிர்­கால அர­சி­யலை மேற்­கொள்ள முடி­யாது. இந்த பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியை வீழ்த்­து­வதே எமது நோக்­க­மெ­னவும் அவர் குறிப்­பிட்டார்.
பொதுத் தேர்­தலின் பின்னர் மீண்டும் தேசிய அர­சாங்கம் அமை­வ­தற்­கான சாத்­தியம் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இந்த தேசிய அர­சாங்­கத்­தி­னூ­டாக அவ­சி­ய­மான அர­சியல் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்த முடிந்­தமை உண்­மை­யாகும். அதை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். 19ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்றப் படு­வ­தற்கு தேசிய அர­சாங்கம் கைகொ­டுத்­தது. அதேபோல் 20ஆவது திருத்தச் சட்­டத்­தையும் இந்த அர­சி­னூ­டாக நிறை­வேற்றி அதன்­பின்னர் பொதுத் தேர்­த­லுக்கு செல்­ல­வேண்டும்.
இது­வ­ரைக்கும் தேசிய அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்பு அவ­சி­யமே தவிர தொடர்ந்தும் தேசிய அர­சாங்­கத்தை கொண்டு செல்­ல­வேண்­டிய அவ­சியம் இல்லை. பொதுத் தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் அமை­வதை நாம் விரும்­ப­வில்லை. அனு­ம­திக்­கப்­போ­வதும் இல்லை. எனவே அடுத்த அர­சாங்கம் தனிக் கட்­சியின் அர­சாங்­க­மா­கவே அமைய வேண்டும்.
பிர­தான இரு கட்­சி­களில் ஒரு கட்சி ஆட்­சியில் இருக்க வேண்டும். ஆனால் அது மக்­களின் ஆத­ரவை பெற்ற கட்­சி­யாக இருக்க வேண்டும். இது­வரை நாட்­களும் தேசிய அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆதிக்கம் அதி­க­ரித்­தி­ருந்­தது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியே இன்று நடக்­கின்­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க மக்­களின் ஆத­ரவை பெறாது பிர­த­ம­ராக செயற்­ப­டு­கின்றார். இது முர­ணான விட­ய­மாக இருந்­தாலும் நாம் இப்­போது இந்த விட­யங்­களை விமர்­சிப்­பது அவ­சி­ய­மற்­றது. வெகு விரைவில் பொதுத் தேர்தல் நடை­பெ­ற­வி­ருப்­ப­தனால் தேர்­தலில் பல­மான கட்­சி­யாக போட்­டி­யிட்டு ஆட்­சியை ஜன­நா­யக ரீதியில் கைப்­பற்­று­வதே எமது இலக்­காக்கும்.

அதற்­கான வேலைத் திட்­டங்­களை நாங்கள் ஆரம்­பித்­துள்ளோம். அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரே எமது பிர­தான எதி­ரி­யா­வார்கள். அவர்­களை வீழ்த்தி பல­மான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும். மீண்டும் நாட்டில் எமது அர­சாங்கம் உரு­வாக வேண்டும்.அவ்­வா­றா­ன­தொரு போராட்­டத்தில் ரணிலை இணைத்து தேசிய அர­சாங்­கத்தை மீண்டும் உரு­வாக்­கு­வதை நாம் விரும்­ப­மாட்டோம்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எமது கட்­சியின் தலைவர், ஆனால் தேசிய அர­சாங்­கத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இணைந்­துள்ளார்.
எனவே இந்த அர­சாங்கம் தற்­கா­லி­க­மா­னது மட்­டுமே. அதேபோல் நாம் அரசாங்கத்தில் பங்குதாரராக இருந்தாலும் எதிர்க்கட்சியாகவே செயற்படுகின்றோம். எனவே பொதுத் தேர்தல் வரையிலேயே இவை அனைத்தும் நிலைத்திருக்கும். தேர்தலின் பின்னர் ஜனாதிபதி, பிரதமரை உள்ளடக்கிய எமது அரசாங்கத்தை அமைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-virakesary.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :