காத்தான்குடி மில்லத் பாடசாலை சந்தியில் உள்ள ஊர் வீதி மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது இது மழை காலங்களில் பயணிக்க முடியாத ஓர் அவலநிலை காணப்படுவதனாலும் சாதாரண காலங்களில் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்குவதவதனாலும் இவ் வீதியினுடைய அப்பகுதியை தற்காலிகமாக சீர் செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வேண்டுகோள் விடுத்ததற்கு இனங்க இதனை சீர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளது இதன் முதல் கட்டமாக ABC கலவை கற்கள் இடப்பட்டு இந்தப்பகுதி நேர்த்தியக்கப்படுகின்றது.
இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் இப்பாதை பூரணமாக செப்பநிடுவதற்கானநடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதுவரைக்கும் மக்களுடைய இலகுவான பிரயாணத்திற்காக தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது.
என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லிபாறூக் தெறிவித்தார் .
(ஜுனைட்.எம்.பஹ்த் )


