Featured Home (TOP)

Recent Comments

Friday, May 15, 2015

Unknown

வில்பத்து விவகாரம் உபகுழு நியமியுங்கள்

வில்­பத்து சர­ணா­லயம் தொடர்பாக அமைச்­ச­ரவை உப­கு­ழு­வொன்றை அமைத்து விசா­ர­ணை­களை முன்னெடுக்குமாறு ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­துள்­ள தாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யூதீன் தெரி­வித்தார்.
வில்­பத்து சர­ணா­லாய விடயம் தொடர்பில் அமைச்­ச­ரவை கூட்­டத்தில் எவ்­வா­றான விடங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன என கேள்­வி­யெ­ழுப்­பிய போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில்,
வில்­பத்து சர­ணா­லயத்தில் எநத்­வொரு முஸ்­லிம்­களும் சட்­ட­வி­ரோ­த­மா­க­கு­டி­யேற்­றப்­ப­ட­வில்லை. அவர்­க­ளுக்குச் சொந்­த­மான உறு­தி­கள் வழங்­கப்­பட்ட காணி­க­ளி­லேயே குடி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். 1990ஆம் ஆண்டு அங்­கி­ருந்து வெளியேற்­றப்­பட்டு புத்­தளம் பகு­தியில் தங்­கி­யி­ருந்­த­வர்­களே இவ்­வாறு குடி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.
இவ்­வா­றான நிலையில் தற்­போது பல்­வேறு முரண்­பட்ட கருத்­துக்கள் வெளிப்ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அவை அனைத்தும் உண்­மைக்கு புறம்­பா­னவை.இவ் விட­யங்­களை அமைச்­ச­ர­வையில் நான் தெளிவு படுத்­தினேன். அத்­துடன் அமைச்­ச­ரவை உப­கு­ழு­வொன்றை அமைத்து இவ்­வி­டயம் தொடர்­பாக உரிய விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரினேன். அம்­மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் எதிர்­காலச் செயற்­பா­டுகள் தொடர்­பாக உரிய முறையில் ஆராய்ந்து அறிக்­கை­யொன்றை சமர்ப்­பிக்­கு­மாறும் வேண்­டுகோள் விடுத்­துள்ளேன்.
மேலும் வில்­பத்து சர­ணா­ல­யத்தில் சட்­ட­வி­ரே­த­மாக மரங்­களை அழித்­த­தாக என்­மீது குற்றம் சாட்­டு­வது தவ­றா­ன­தொன்­றாகும். வன­பா­து­காப்புச் சட்­டங்­க­ளுக்கு அமை­வாக பாரிய மரங்­களை அனு­ம­தி­யின்றி வெட்­டு­வது குற்றமாகும். ஆகவே அனுமதி பெறப்பாடாது மரங்கள் வெட்டப்பட்டிருப்பின் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். எமது நாட்டின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை என்றார்.
Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :