Featured Home (TOP)

Recent Comments

Wednesday, May 13, 2015

Unknown

இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் நூதனசலையை மாற்றியமைக்கவும்: NFGG நடத்திய மக்கள் அழுத்தப் போராட்டம் - படங்கள்



காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் மாற்றியமைக்கக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி "மக்கள் அழுத்தப் போராட்டம்" ஒன்றினை இன்று நடாத்தியது.
காத்தான்குடி நகரசபை முன்பாக இன்று காலை 09.00 மணிக்கு ஆரம்பமான இந்த மக்கள் அழுத்தப் போராட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான SH.பிர்தௌஸ், MAHM.மிஹ்ழார் மற்றும் NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), உள்ளிட்ட பிராந்திய சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன் ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல தலைவர் முஹம்மது ஷிப்லி மற்றும் பொதுச்செயலாளர் புவி MI.ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது அங்கு கருத்துரைத்த NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), "NFGG காத்தான்குடியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூதனசாலையை எதிர்க்கவில்லை, ஆனால் அதனை இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை, தஃவா அமைப்புக்களின் வழிகாட்டல்களுடன் கையாள வேண்டும் என NFGG கேட்டுக்கொள்கிறது. அத்துடன் இன்றைய நகரசபை அமர்வு இறுதி அமர்வாகக் கூட இருக்கலாம், அப்படியிருந்தால் இதன் பின்னர் எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்க முடியாமல் போய்விடலாம். எனவேதான், கடந்த சபை அமர்வில் NFGG உறுப்பினர்கள் சமர்ப்பித்த 'காத்தான்குடி நூதனசாலையில் சிலைகளை அகற்றுவது தொடர்பான பிரேரணையை' அங்கீகரிக்கக் கோரி இந்த மக்கள் அழுத்தப் போராட்டத்தினை NFGG நடாத்துகிறது" என தெரிவித்தார்.
''காத்தான்குடி நூதனசாலையில் இஸ்லாமிய வரைமுறைகளை மீறி உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமையானது ஹறாம் என அகில  இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா என்பன மார்க்கத் தீர்ப்புக்களை வழங்கியிருக்கின்றன. எனவே அங்கிருக்கும் உருவச்சிலைகளை அகற்றி விட்டு முஸ்லிம்களின் பூர்வீகத்தையும் இருப்பையும் பாதுகாக்கூடிய வைகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே இந்த மக்கள் அழுத்தப் போராட்டத்தின் நோக்கம்" என ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல பொதுச் செயலாளர் புவி MI.ரஹ்மத்துல்லாஹ் கருத்துத் தெரிவித்தார்.



























Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :