Featured Home (TOP)

Recent Comments

Saturday, May 9, 2015

Unknown

கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுக்கான காத்தான்குடி SRD இன் விருது வழங்கும் விழா

-எம்.எச்.எம்.அன்வர்-

காத்தான்குடி ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூகத்தின் (SRD)  ஏற்பாட்டில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்றது 

அதன் தலைவர் னுச  எம் ஏ ஹாதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் எம் ஐ ஷேகு அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் ஏனைய அதிதிகளாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம் இஸ்மாலெவ்வை காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளர் எம்.எ சி எம் பதுர்தீன் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களும் கலந்துகொண்டனர்


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்ளை மேலும் கல்வியில் சிறப்பான அடைவு மட்டங்களை பெற்று சிறந்த கல்விமானாக திகழவேண்டும் எனும் நோக்கில் வருடாந்தம் பரிட்சைகள் நடாத்தி சிறந்த பெறுபேறுகளை பெறும் மாணவர்களை கௌரவித்து வருகின்றது இந்த நிறுவனம்
இந்த நிறுவனத்தில் காத்தான்குடியைச்சேர்ந்த சிறந்த கல்வியியலாளர்கள் ஒன்று சேர்ந்து தற்போதுள்ள கல்வி திட்டத்துடன் கூடிய பாடவிதானங்களைக்கொண்டு பரீட்சை கேள்விகளை தொகுத்து பரிட்சை நடாத்தி அதி கூடிய பெறுபேற்றினைப்பெறும் 10 மாணவர்கள் வருடாந்தம் கௌரவிக்கப்படுகின்றனர்.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் ஏனைய நிகழ்வுகளின்போது ஏற்கனவே தெரிவசெய்யப்பட்டவர்கள் அறிவிக்கப்பட்டு அழைப்புக்கள்  அனுப்பப்பட்டுவிடும்; ஆனால் இந்த விழாவில் மிகவும் ஆவலுடன் இறுதி வரை ஆகக் கூடிய புள்ளியை பெறும் மாணவர் காத்திருந்து அறியக்கிடைப்பது சிறப்பம்சமாகும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர் 










Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :