Featured Home (TOP)

Recent Comments

Friday, June 19, 2015

Unknown

"20 இற்கு பின்­னரே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டும்''

இரு­ப­தா­வது திருத்தம் நிறை­வேற்­றப்­பட்ட பின்­னரே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும். 20 ஆவது திருத்­தத்­தில் 237 ஆசன முறை­மைக்கு ஐ.தே.க.வும் அமைச்­ச­ர­வையில் இணக்­கத்தை தெரி­வித்துள்­ள­து என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வி­த்­தார்.

கொழும்பில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன,இரு­ப­தா­வது திருத்தம் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
இனி இது தொடர்பில் எதிர்ப்­புக்கள் இருக்­கு­மாயின் உயர் நீதி­மன்­றத்தில் எதிர்ப்­புக்­களை இரண்டு வாரங்­க­ளுக்குள் தாக்கல் செய்­யலாம்.அதன் பின்னர் இரு­ப­தா­வது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் முன் வைக்­கப்­பட்டு விவாதம் நடத்­தப்­பட்டு நிறை­வேற்­றப்­படும்.

இரு­ப­தா­வது திருத்தம் நிறை­வேற்­றப்­பட்ட பின்­னரே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத்­தேர்தல் நடத்­தப்­படும். 237 ஆச­னங்­களை கொண்ட இரு­ப­தா­வது தேர்தல் முறைமை மாற்­றத்­திற்­கான திருத்­தத்­திற்கு ஐ.தே.க. அமைச்­ச­ர­வையில் தனது ஆத­ரவை வழங்­கி­யது.
அமைச்­ச­ர­வையின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளி­னதும் ஆத­ரவும் இதற்­கு கிடைத்­துள்­ளது. அத்­தோடு சிறு­பான்மை இன கட்­சி­களும் சிறிய கட்­சி­களும் இதற்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளார்கள். எனவே 20 நிறை­வேற்­றப்­பட்ட பின்­னரே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும்.
புலம்­பெயர் தமி­ழர்கள்
கடந்த ஆட்­சியில் கே.பி. ஊடாக மட்­டு­மல்ல நானும் புலம்­பெயர் தமி­ழர்­க­ளையும் அமைப்­புக்­க­ளையும் சந்­தித்தேன்.
பெரும்­பா­லா­ன­வர்கள் இலங்­கைக்கு வர­வ­ழைக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு விருந்து வழங்கி பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினேன். அவர்கள் வெளி­நா­டு­களில் சம்­பா­தித்த பணத்தை இங்கு முத­லீடு செய்ய விரும்­பு­வ­தா­கவும் ஓய்வு பெற்ற தாங்கள் இலங்­கையின் வடக்கில் தமது சொந்த ஊர்­களில் சொந்த வீடு­களை புனர்­நிர்­மாணம் செய்து இலங்­கையில் வாழ விரும்­பு­வ­தா­கவும் தெரி­விக்­கின்­றனர்.

இதனை அன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் தெரி­வித்தேன். ஆனால் அன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் அமை­தி­யாக வாழ விரும்­பிய புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்கு இரட்டை பிர­ஜா­வு­ரி­மையை வழங்­கு­வதை எதிர்த்­தனர்.
அவர்கள் முத­லீடு செய்­வதை எதிர்த்­தார்கள். இலங்­கைக்கு வரு­வ­தையே எதிர்த்­தார்கள். இதனால் நாட்­டுக்கு கிடைக்­க­வி­ருந்த நன்­மைகள் கிடைக்­காமல் போனது. அர­சியல் தீர்­வையும் நிம்­ம­தி­யான வாழ்க்­கை­யை­யுமே இவர்கள் எதிர்­பார்த்­தனர்.
பிரி­வி­னையை இவர்கள் எதிர்த்­தனர். ஆனால் அன்று சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை. இன்­றைய அர­சாங்கம் அதற்­கான சந்­தர்ப்­பத்தை வழங்­கு­கின்­றது தவ­றில்லை.
பொதுத்­தேர்தல்
எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் போதைப்­பொருள் விற்­ப­னை­யா­ளர்கள் கடத்தல்காரர்கள் ஊழல் மோசடிக்காரர்களுக்கு போட்டியிடு வதற்கு வேட்பு மனு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். விரைவில் போதைப்பொருள் விற்பனை கடத்தல்களை தடுப்பதற்காக விசேட பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :