ஆசி கந்தராஜவின் 'கறுத்தக் கொழும்பான்' புனைக்கட்டுரை,:'கீதையடி நீயெனக்கு...:' குறுநாவல் தொகுதி மற்றும் சௌந்தரி கணேசனின் 'நீர்த்திரை' கவிதைத் தொகுப்பு ஆகிய நூல்கள் வெளியீடு எதிர்வரும் 27ம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் டாக்டர் ஞானசேகரன் தலைமையில் மாலை 5 மணிக்கு இடம்பெறும் நிகழ்வில் இலக்கியப்புரவலர் ஹாஸிம் உமர் முன்னிலை வகிப்பார்.
இந்நிகழ்வில் தமிழ் வாழ்த்து செல்வி வாசுகி சுவாமிநாதன் சர்மா பாட வரவேற்புரையை ஞா.பாலச்சந்திரன் (முகாமையாளர்- இலங்கை மத்திய வங்கி) நிழ்த்துவார். ஆசியுரை புலேலியூர் ஆ.பாலச்சந்திரன் (ஊடக முகமையாளர் -தினக்குரல்) சிறப்புரை 'புலம்பெயர் இலக்கியம்' நூலகர் என். செல்வராஜா லண்டன் நிகழ்த்த, நூல்களின் முதற்பிரதிகளை அண்ணாமலை இhhஜேந்திரன் ,மகேஸ்வரி கணேசன் ஆகியோர் பெறுவர். 'கறுத்தக் கொழும்கான்'-பேராசிரியர் வே.மகேஸ்வரன் ,'கீதையடி நீயெனக்கு' வைத்திய கலாநிதி செ.சுப்பரமணியம், 'நீர்த்திரை' -பேராசிரியர் துரைமனோகரன், செல்வி துஸ்யந்தி செல்வராஜா ஆகியோர் நூல் ஆய்வு செய்வர்.கருத்துரை தெளிவத்தை ஜோசப் நிகழ்த்துவார்
