(இன்பாஸ் சலாஹூதீன்)
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இங்கு விசேட உரையாற்றினர்.
அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி, றிசாட் பதியூதீன், ரவுப் ஹக்கீம், கபீர் காசிம், ஹலீம் ,ஹஸனலி மற்றும் வெளிநாடுகளின் தூதுவர்கள் , ஊடகவியலாளர்கள் எனபலரும் கலந்து கொண்ட நிகழ்வில் கலைஞர் கலைச்செல்வன், இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொன்னாடைபோத்தியமை இங்கு விசேட இம்சமாகும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்தார் நிகழ்வில் இறுதிவரையும் இருந்து கலந்து கொண்டவர்களுடன் உரையாடியதும் இங்கு விசேட அம்சமாகும்.
பிரமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பிரதி நிதி சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.