Featured Home (TOP)

Recent Comments

Saturday, June 6, 2015

Unknown

காத்தான்குடிகுப்பைப் பிரச்சினை தொடா்பில் மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.


அன்புப் பொதுமக்களுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்...)

காத்தான்குடி நகரசபையினூடாக வீடுகளிலிருந்து சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை தற்காலிகமாக ஆற்றங்கரையோரத்தில் கொட்டிவந்ததை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க அங்கு கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு இதற்கான ஓர் நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி P.S.M.சார்ள்ஸ் அவர்களினால் இதற்கான ஓர் நிரந்தர தீர்வொன்றினை பெற்று தருவதாகவும், தற்போது அமைக்கப்பட்டு கொண்டிருக்கின்ற கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இந்தக் கழிவுகளை கொட்டுவதற்கு அனுமதி தரப்படும் எனவும், இந்த நிலையத்தின் நிர்மாண வேலைகள் வருகின்ற 9ஆம் மாதமளவில் பூர்த்தியடைய இருப்பதால் தயவுசெய்து பொதுமக்கள் இவ்விடயத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதேநேரத்தில் தற்காலிகமாக ஒன்பதாம் மாதம் வரைகுறிப்பிட்ட ஆற்றங்கரை ஓரத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதித்திருந்த போதிலும் நீதிமன்றம்ஆற்றங்கரையில் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்திருப்பதால் பாரிய சிக்கல் தோன்றியுள்ளது.

என்றாலும் நகரசபையினால் பராமரிக்கப்படுகின்ற கூட்டுப்பசளை தயாரிப்புக்கு உக்கக்கூடிய கழிவுகள் பாவிக்க முடியும் என்பதால் இவைகளை வேறாக தரம் பிரித்து வீடுகளுக்கு கழிவுகளை
சேகரிக்கும் நகரசபை ஊழியர்களிடம் வழங்குங்கள்.

இதற்கிணங்க சமையலறைக் கழிவுகள் மற்றும் உக்கக்கூடிய சேதனக் கழிவுகளை வேறாக பிரித்து நகரசபை கழிவு சேகரிப்பு வாகனங்களுக்கு கொடுக்குமாறும் கடதாசி, கண்ணாடி, பிளாஸ்டிக், மரக்கட்டை, பொலித்தீன் பைகள், இவை போன்ற திண்மக்கழிவுகளை வேறாக பிரித்து வீடுகளில் வைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறான திண்மக்கழிவுகளுக்க தற்காலிகமாக ஒன்பதாம் மாதம் வரை ஓர் தீர்வினை பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதனால், பொது மக்களாகிய நீங்கள் அனைவரும் இதற்கு பூரண ஒத்துழைப்பினை தந்துதவுமாறு வேண்டுகிறேன்.

குறிப்பு : தயவு செய்து வீதிகளில் குப்பைகளை வீசுவதனூடாக எல்லோரும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய சுகாதார சீர்கேடுகளில் இருந்து நம்மை நாம் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வண்ணம்,
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்,
பொறியியலாளர் சிப்லி பாறூக்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :