Featured Home (TOP)

Recent Comments

Saturday, June 27, 2015

Unknown

அல்-மினா விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவும் “இப்தார்” நிகழ்வும்.

( முஹம்மட் ஜெலீல், நிந்தவூர் )

நிந்தவூர் -9 அல்- மினா விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான பொதுச் சபைக் கூட்டம் 2015-06-26ம் திகதி வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணியளவில், நிந்தவூர் அல்- மினா வித்தியாலயம் மண்டபத்தில், நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகஸ்தர் (S.O) ஜனாப் எஸ்.எல். தாஜுத்தீன் அவர்களின் தலமையில் இடம் பெற்றது,

மேலும் இக்கூட்டத்தில் கிராம அதிகாரி ஜனாப் எ. ஆர்.எம். வஸீம் அவர்களும், மற்றும் கழக உருப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள்.

கழகத்தின் தலைவராக: கே.எம். சாபீர் அவர்களும் (R.D.S. தலைவர்),
பொருளார்: எம்.எம். பாரிஸ் அவர்களும்,                      
செயலாளர்: எ.எம். இஜாஸ் அவர்களும்,
அணியின் முகாமையாளர்: முஹம்மட் றபீக் அவர்களும்
அணியின் தவிசாளராக: ஜெ.எ. றியாஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்த்து அல்-மினா விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வும் இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜனாப் எம்.எ.எம். தாஹிர் அவர்களும், எதிர்க் கட்சித் தலைவர் யு.எல். சுலைமாலெப்பை அவர்களும், கௌரவ அதிதிகளாக ஜனாப் எம்.எல்.எம். நிகார்த்தீன் (அதிபர்) அவர்களும் ,யு.எல்.எம். சாஜித் (ஆசிரியர்), மற்றும் கழகத்தின் உறுப்பினர், போசகர்கள், ஆலோசகர்கள் என எராளமானோர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் மார்க்க சொற்பொழிவு பயான் உரை எம்.எஸ். அப்துல் ஹாதி (மௌலவி) அவர்களால் நிகழ்த்தப்பட்டு இந் நிகழ்வு சிறப்புடன் நிறைவுபெற்றது.







Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :