(ஜுனைட். எம்.பஹ்த் )
கடந்த இருவாரங்களாக காத்தான்குடி நகரசபையினர் விரைவில் உக்கும் குப்பைகளை மாத்திரம் சேகரித்து வருவதோடு ஏனைய குப்பைகளை எடுக்க மறுத்து வருவதால் காத்தான்குடி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது..
வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இரவு நேரங்களில் வீதிகளிலும் பொதுஇடங்களிலும் மக்கள் வீசிவருவதனால் பாடசாலை மாணவர்களும் சிறுவர்களும் சுகாதார பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர் .
உரிய அதிகாரிகள் இவ் விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
(ஜுனைட். எம்.பஹ்த் )

