Featured Home (TOP)

Recent Comments

Tuesday, July 28, 2015

avathani Media Network

குர்ஆன் அவமதிப்பு வழக்கு - அடுத்த தவணைக்கு முன் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க உத்தரவு


புனித குர்­ஆனை அவ­ம­தித்­த­தாக பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மீது குற்றம் சுமத்தி தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கும் மற்றும் கொழும்பு நிப்போன் ஹோட்­டலில் நடை­பெற்ற ஜாதி­க­ ப­ல சேனா அமைப்பின் ஊடக மாநாட்­டினுள் பலாத்­கா­ர­மாக பிர­வே­சித்து குழப்பம் விளை­வித்­த­தாக ஞான­சார தேரர் மீதும் மற்றும் 6 பொது­பல சேனா அமைப்பைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கும் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்­கெ­டுத்துக் கொள்­ளப்­பட்­டது.

கொழும்பு கோட்டை நீதிவான் பிரி­யந்த லிய­னகே முன்­னி­லையில் இவ்­வ­ழக்­குகள் விசா­ர­ணைக்­கெ­டுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சா­ர ­தே­ரரும் ஏனைய சந்­தேக நபர்­களும் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

சம்­பவம் நிகழ்ந்­த­போது தொலைக்­காட்சி ஊட­கங்­க­ளினால் பதிவு செய்­யப்­பட்ட ஒளிப்­ப­திவு ஆய்­வு­க­ளுக்­காக மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும் பல்­க­லைக்­க­ழகம் இது­வரை அது தொடர்­பான அறிக்­கையை அனுப்­பி­ வைக்­க­வில்லை எனவும் பொலிஸார் நீதி­மன்றில் தெரி­வித்­தனர்.

நீதிவான் ஒளிப்­ப­திவு அறிக்­கையைப் பெற்றுக் கொண்டு அடுத்த விசா­ரணைத் தவ­ணைக்கு முன்பு குற்றப் பத்­தி­ரி­கையைத் தயா­ரிக்­கு­மாறு உத்­த­ர­விட்­ட­துடன் விசாரணையை எதிர்வரும் அக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

வாதிகள் தரப்பில் RRT சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :