நேற்று வெள்ளிக்கிழமை காலை
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் வெருகல் பிரதேச செயலகத்துக்கு அருகில்
காட்டு யானை தாக்கியதில் மீனவ குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட்டவான் கிராமத்தைச் சேர்ந்த
கதிர்காமத்தம்பி விஜயகுமார் (வயது 31) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே
காட்டு யானையின் தாக்குதலால் மரணித்தவராகும்.
வீட்டிலிருந்து மீன்பிடிப்பதற்காகச்
திருகோணமலை – மட்டக்களப்பு
நெடுஞ்சாலையால் சைக்கிளில் சென்று
கொண்டிருந்த சமயம் வழிமறித்த காட்டு யானை இவரின் தலையில்
ஏறி மிதித்துக் கொன்றுள்ளது. மீனவர்
பயணம் செய்த சைக்கிளையும் யானை
நொருக்கியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சேருவில பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கொல்லப்பட்ட மீனவரின் சடலம் தற்சமயம் பிரேத பரிசோதனைக்காக வெருகல் பிரதேச
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்காலத்தில் நெல் அறுவடை
ஆரம்பித்துள்ளதால் வெருகல் பிரதேசத்தில் காட்டு யானைகள் உள்ளுருக்குள்
ஊடுருவுவது அதிகரித்திருப்பதாக பிரதேச
வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை காட்டு யானைகளின் ஊடுருவல் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர்
மற்றும் வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளதாக பிரதேச
செயலாளர்
தெரிவித்தார்.
(ஜுனைட்.எம்.பஹ்த்)