Featured Home (TOP)

Recent Comments

Wednesday, July 8, 2015

Unknown

நிந்தவூர் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கலும், தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பும்.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்  நிந்தவூர் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கலும், தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பும். -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் பிரதம அதிதி-

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் அவர்களின்  தனிப்பட்ட நிதிஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை, நிந்தவூர்ப் பிரதேசத்தில் செயற்பாட்டிலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வும், தேசிய மட்ட சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று(07) நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் இடம் பெற்றது.

நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம்.இப்றாகீம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமா அல்ஹாபீஸ் றிபாய் மௌலவி, முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.ரி.ஜப்பார் அலி, நிந்தவூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எல்.அனஸ் அஹமட், விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஹுதீன், கல்லூரி பிரதி அதிபர் ஏ.எல்.நிசாமுதீன் ஆகியோருடன் நிந்தவூர் பிரதேச முன்னணி விளையாட்டுக் கழக முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமினால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, 40வது தேசிய விளையாட்டுப் போடடிகளில் தங்கப் பதக்கம் வென்று, பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த எஸ்.எம்.ஆரீப், என்.நிக்சி அஹமட், கே.எம்.முர்சித் முஹம்மட் , 'முப்தி' பட்டம் பெற்ற சங்கைக்குரிய உலமா ஏ.எல்.மின்ஹாஜ் ஆகியோருக்கு சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-' விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கிடையில் ஒற்றுமை காணப்பட வேண்டும்'  எனக் கேட்டுக் கொண்டார்.








Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :