(இன்பாஸ் சலா{ஹதீன்)
'இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள்' என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை வட பழனியிலுள்ள தமிழ்நாடு தொல்காப்பிய பேரவை ஆதித்தியா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சிவலிங்கம் சதீஷ்குமார் எழுதிய இந்நூலின் முதற் பிரதியை இலக்கிய செம்மல் குமரி ஆனந்தனிடமிருந்து புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் எச்.வீ.ஹாண்டே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலக்கிய செம்மல் குமரி ஆனந்தன், நடிகர் எஸ்.வீ.சேகர், பாரதிய ஜனதா தமிழ் நாடு துணைத் தலைவர் வானதி ஸ்ரீ நிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.