Featured Home (TOP)

Recent Comments

Tuesday, July 28, 2015

avathani Media Network

பொரளை பள்ளி தாக்குதல். - சந்தேக நபர்களான இரு பிக்குகளை கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவு

பொரளை பள்­ளி­வாசல் தாக்­குதல் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் பொலி­ஸாரால் தேடப்­பட்டு வரும் சந்­தேக நபர்­க­ளான பௌத்த குருமார் இரு­வ­ரையும் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கொழும்பு 2 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்ற நீதிவான் பொலி­ஸா­ருக்கு நேற்று உத்­த­ரவு வழங்­கினார்.

பொரளை பள்­ளி­வாசல் கல்­வீச்சு தாக்­குதல் தொடர்­பான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போதே நீதிவான் பொலி­ஸா­ருக்கு இந்த உத்­த­ர­வினை வழங்­கினார்.

இச் சம்­ப­வம்­தொ­டர்­பாக சந்­தே­கத்தின் பேரில் பொலி­ஸாரால் கைது செய்யப்­பட்டு சுமார் ஒன்­றரை மாத­கா­ல­மாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள மூன்று சந்­தேக நபர்­க­ளையும் பொலிஸார் நேற்று நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தினர்.

சந்­தேக நபர்கள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் மூவ­ரையும் பிணையில் விடு­மாறு வாதிட்­டனர். சந்­தேக நபர்­களில் ஒரு­வரின் மனைவி கர்ப்­பி­ணி­யாக இருப்­ப­தா­கவும் சந்­தேக நபரில் ஒருவர் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள க.பொ.த. (உ/த) பரீட்சை எழுதும் மாணவர் எனவும் அடுத்த சந்­தேக நபர் சுக­யீ­ன­மாக இருப்­ப­தா­கவும் தெரி­வித்து பிணை வழங்­கு­மாறு நீதி­வானைக் கோரி­ய­தற்­கி­ணங்­கவும் பள்­ளி­வாசல்  நிர்­வாக சபையினர் சார்பில் ஆஜ­ரான RRT சட்­டத்­த­ர­ணிகள் அதற்கு எதிர்ப்புத் தெரி­விக்­கா­த­தாலும் நீதிவான் மூன்று சந்­தேக நபர்­க­ளையும் பிணையில் விடு­தலை செய்தார். 

பொரளை பள்­ளி­வாசல் தாக்­குதல் தொடர்பில் தேடப்­பட்டு வரும் இரு பௌத்த தேரர்­களின் வீடு­க­ளுக்குச் சென்று அவர்­களைத் தேடியும் அவர்கள் அங்கு இருக்­க­வில்லை எனவும் அவர்­களைத் தேடிக் கண்­டு­பி­டித்து நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­து­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச் சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் ஒரு அமைப்பும் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பிர­ப­ல­மான நபர் ஒரு­வரும் தொடர்பு கொண்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் ஏற்­க­னவே நீதி­மன்றில் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பொரளை பள்­ளி­வாசல் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி இரவு கல்­வீச்சு தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது. பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மை­யி­லுள்ள நிறு­வ­ன­மொன்றின் சி.சி.ரி.வி. யின் பதி­வு­களை ஆய்வு செய்து நார­ஹேன்­பிட்­டிய பொலிஸார் கடந்த மாதம் 15 ஆம் திகதி இரு சந்­தேக நபர்­களைக் கைது செய்து 72 மணி­நேர தடுப்­புக்­கா­வலில் வைத்து விசா­ரணை செய்­யப்­பட்டு பின் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர். மூன்­றா­வது சந்­தேக நபர் பொலிஸில் சர­ண­டைந்த பின் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார்.

மூன்று சந்­தேக நபர்­களும் தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­கா­கவே பள்­ளி­வாசல் மீது கல் எறிந்ததாக பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விசாரணை எதிர்வரும் அக்டோபர் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பள்ளிவாசல் நிர்வாக சபையின் சார்பில் RRTஅமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.



avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :