Featured Home (TOP)

Recent Comments

Thursday, July 23, 2015

Unknown

காத்தான்குடியில் இடம்பெறவிருந்த ஐ.தே.க.வின் புதிய மத்திய குழுக்கூட்டத்திற்கு மாவட்ட பிரதம அமைப்பாளர் அ. சசிதரன் தடை!


(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)

காத்தான்குடியில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐ.தே.கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திற்கு, மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.கட்சியின் பிரதம அமைப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அரசரத்தினம் சசிதரன் தடைவிதித்துள்ளதாக காத்தான்குடி ஐ.தே.கட்சியின் மத்திய குழுச் செயலாளர் ஏ.எல்.ஏ. கையூம் ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காத்தான்குடியில் 25.07.2015 சனிக்கிழமை பி.பகல். 3:30 மணிக்கு புதிதாக உருவாக்கப்படவுள்ளதாக அழைப்புக் கொடுக்கப்பட்டுள்ள ஐ.தே.க. காத்தான்குடி மத்திய குழுக் கூட்டத்திற்கு தடை விதிப்பு உத்தரவை ஐ.தே.க. மட்டக்களப்பு மாவட்டபிரதம அமமைப்பாளர், தேசிய செயற்குழு உறுப்பினர் கௌரவ அரசரத்தினம் சசிதரன், ஐ.தே.க. காத்தான்குடி மத்திய குழுவின் உபதலைவர் எஸ.ஏ.எம். முபாறக் (MBS) UC UNP  வேட்பாளர் அவர்களுடாக மத்திய குழுவின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி வி.ரி.எம். முபாறக் என்பவர் தலைமையில் ஏற்பாடு செய்துள்ள மத்திய குழுக்கூட்டம் சட்டவிரோதமானது மற்றும் போலியானது என்பது தெளிவுபடுத்தப்படுட்டுள்ளது.

எனவே, ஐ.தே.க. உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஏனையோர் இக்கூட்டத்திற்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :