Featured Home (TOP)

Recent Comments

Monday, July 6, 2015

Unknown

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டுச் சேருகிறது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைக்கும் வாய்ப்பு

(அவதானி)

எதிர் வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்து வாக்கு வேட்டையில் இறங்க விருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் நல்லாட்சிகான தேசிய முன்னணி நடாத்திய அவர்களது கூறா சபை மற்றும் ஆலோசன சபைக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், அவர்களது உயர்மட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் அவர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் களம் இறங்க விருப்பதாகவும் அறிய முடிகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு  பதவி ஆசைகளைத் துறந்து தனது சமூகத்திற்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி என்பதாலும்   மக்களை ஏமாற்றாமல் காலம் காலமாக அரசியல் செய்துவருகின்ற கொள்கைவாதக்ககட்சி என்பதாலும் இக்கட்சியோடு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைவதையே அதிகமான கட்சியின் உறுப்பினர்களும், எனையோரும் விரும்புகின்றனர்.

அது மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் நல்லுறவை தொடர்ந்தும் கட்டிக் காப்பதற்கும் பேணிவருவதற்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எடுத்திருக்கும் இத்தீர்மானம் வழிவகுக்கும் என்றும் இன நல்லுறவை விரும்பும் பலரும் கருத்துத் தெரிவிக்கி;னறனர். 

மாகாண சபைத் தேர்தலில் வடமாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைந்து தேர்தல் கேட்டதன் அடிப்படையில் கொடுத்த வாக்குறுதிக்கமைய ஒரு உறுப்பினரை வழங்கியதன் மூலம் நம்பிக்கைக்குரியவர்கள் என்ற பெயரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெற்றிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது பொருத்தம் எனவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இரு அணிகளும் இணைந்து பேசப்பட்டதன் அடிப்படையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு தேசியப்பட்டியலில் இரு இடம் வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடன்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இருந்தாலும் இதுவரை எந்தவிதமான உத்தியோக பூர்வ முடிவினையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவி;க்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :