Featured Home (TOP)

Recent Comments

Wednesday, July 22, 2015

Unknown

முஸ்லிம் அடிப்­படைவாத அமைப்­புக்­களை தடை செய்­யவும் : பொது­பல சேனா வேண்­டுகோள்

பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு கர­கோஷம் செய்யும் இலங்கை முஸ்லிம் இளை­ஞர்­களால் எமது தனித்­து­வத்தை இழந்­துள்ளோம். இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் அனைத்­தையும் தடை­செய்ய வேண்­டு­மென பொது­ப­ல­சேனா அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தியுள்­ளது.

கொழும்பு கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பொது­பல சேனா அமைப்பின் அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வா­ய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அதன் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.
இலங்­கையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் தலை­தூக்கி வரு­வ­தாக நாம் மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே கூறி வரு­கின்றோம். நாம் இந்த ஆபத்து எச்­ச­ரிக்கை சமிக்­ஞையை பல­முறை விடுத்தோம்.
இது முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக நாம் செய்த பிர­சா­ர­மல்ல. முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் தொடர்­பா­கவே எச்­ச­ரிக்­கைகள் விடுத்தோம். ஆனால் அன்று எம்மை இன­வா­திகள் என முத்­திரை குத்­தி­னார்கள். இன்று இலங்­கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவி­ர­வாத அமைப்பின் உறுப்­பி­ன­ராக இருந்­துள்­ள­தோடு சிரி­யாவில் நடத்­தப்­பட்ட விமானத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­துள்ளார்.
அன்று நாம் சொன்­னது இன்று உண்­மை­யென்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. எனவே அர­சாங்கம் உட­ன­டி­யாக இலங்­கையில் இயங்கும் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­களை தடை­செய்ய வேண்டும். பாது­காப்பு தரப்­பி­னரும் இவ்­வா­றான அமைப்­புக்கள் தொடர்­பாக விழிப்­பாக இருக்க வேண்டும்.
இலங்கை சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு சொந்­த­மான நாடு. இங்கு தமிழ்இ முஸ்லிம் என இனக் குழுக்கள் வாழ்­கின்­றார். ஆனால் அவர்­களை இலங்­கை­யர்­க­ளாக ஏற்றுக் கொள்ள முடி­யாது. 1970களில் இருந்து இலங்­கையின் தனித்­துவம் தொடர்­பாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கி­றது. ஆனால் இது நாட்டில் அமுலில் உள்­ளதா? இல்லை. இலங்­கைக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் கிரிக்கட் போட்டி நடக்கும் போது பாகிஸ்­தா­னுக்­காக இங்­குள்ள முஸ்லிம் இளை­ஞர்கள் கர­கோசம் செய்­கின்­றனர்.

அவர்­க­ளிடம் இலங்­கையின் தனித்­துவம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்ற கொள்கை எங்கு போனது. சிங்­கள பௌத்­தர்­களை பாது­காக்­கவே நாம் செயற்­ப­டு­கின்றோம். சிங்­க­ள­வர்­க­ளுக்கு பிரச்­சினை உள்­ளது என்­பதை ஏற்றுக் கொள்ள ரணில்இ மஹிந்தஇ சந்திரிக்காவால் முடியாதுள்ளது என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகேவும் கலந்து கொண்டார்.


Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :