(NFGG ஊடகப்பிரிவு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தல் பிராச்சரக் கூட்டம் நேற்றும் காங்கேயனோடை பிரதேசத்தில் இடம்பெற்றது.
காங்கேயனோடைப் பிரதேச நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்குழு உறுப்பினர் MM.ஹாபில் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் SLMCயின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளரும் NFGGயின் தவிசாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், SLMCயின் மட்டக்களப்பு மாவட்ட 5ம் இலக்க வேட்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக், NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி),SLMCயின் மத்தியகுழு உறுப்பினர் மதீன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இதன்போது NFGGயின் பிராந்திய தலைமைத்துவசபை உறுப்பினர்களான AGM.ஹாறூன், முன்னாள் தவிசாளர் SMM.காசீம், MAHM.மிஹ்ழார், காங்கேயனோடை செயற்குழு உறுப்பினர் மௌலவி AGM.சிறாஜ் (பலாஹி), SLMCயின் கொள்கை பரப்புச் செயலாளர் ULMN.முபீன் உள்ளிட்ட SLMC முக்கியஸ்தர்கள் உட்பட உலமாக்கள், புத்திஜீவிகள், நலன்விரும்பிகள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
