Featured Home (TOP)

Recent Comments

Tuesday, August 11, 2015

avathani Media Network

வெளிநாடுகளில் வதியும் 20 இலட்சம் இலங்கையர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வேண்டும்! இல்லையேல் தேர்தலை ஒத்திப் போடவேண்டும்!! -மனித உரிமை ஆணைக்குழுவிடம் இலங்கை இடம்பெயர் கூட்டமைப்பு முறையீடு-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் சுமார் 20 இலட்சம் இலங்கையர்களுக்குத் தமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குரிமைகளைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் தமது நாட்டுப் பிரஜைகள் அவர்களது விருப்பத்திற்கிணங்க வாக்களிப்பதற்கான சந்தர்ப்பங்களை அந்நாடுகளிலுள்ள தமது தூதரகங்கள் மூலம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

எனவே, அது போன்று எமது நாட்டிலும் எதிர்வரும் 17ந் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் சுமார் 20 இலட்சம் பேருக்கும் வாக்களிப்பதற்கான வசதிகளைத் தேர்தல் ஆணையாளர் ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையேல் இத் தேர்தலை ஒத்திப் போடவேண்டும். எனக் கோரும் அடிப்படை மனித உரிமை தொடர்பான முறைப்பாட்டு மனுவொன்று நேற்று(10) இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைக் காரியாலயத்தின் இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீனிடம் இலங்கை இடம்பெயர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் றக்கீப் ஜஃபர் தலைமையிலான குழுவினர் ஒப்படைத்தனர்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைக் காரியாலய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் கருத்துத் தெரிவிக்கையில்; ' இவர்களது முறைப்பாடு சம்மந்தமாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடன் மேன் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அவர்களுக்கான நீதி கிடைக்க எமது ஆணைக்குழு உதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை' எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக இலங்கை இடம்பெயர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் றக்கீப் ஜஃபர் கருத்துத் தெரிவிக்கையில் ' சுமார் 20 இலட்சம் வாக்குகள் என்பது ஒரு ஆட்சியைத் தீர்மானிக்கின்ற சக்தியாகும். இவ்வாறான 20 இலட்சம் பேரின் வாக்குரிமைகள் மறுக்கப்படுவதாவது அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவே கருதஇடமுண்டாகிறது. எனவே ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு தபால் மூலமாவது வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டம். இல்லையேல். இத்தேர்தலை உடன் ஒத்திப் போட வேண்டும் என தேர்தல் ஆணையாளரைக் கோருகின்றோம். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து நாம் நீதிமன்றம் செல்லத் தயாராய் இருக்கின்றேம்' எனத் தெரிவித்தார்.







avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :