Featured Home (TOP)

Recent Comments

Friday, August 14, 2015

avathani Media Network

பொதுத் தேர்தல் 2015 ஆய்வுக் கணிப்பீடுகள்

நாட்டில் மிகவும் முக்கியமான பொதுத் தேர்தல் ஒன்றை மக்கள் சந்திக்கவுள்ளார்கள். நாடு முழுவதும் இருந்து  196 எம்பிக்களை தெரிவு செய்வதற்கான மிகவும் பலமான போட்டி. 29 எம்பிக்கள் தேசியப்பட்டியல் மூலமாக 225 எம்பிக்கள் கொண்ட நாடாளுமன்றத் தேர்தல்.

இதில் மிகவும் உன்னிப்பாக பார்ககப்படும் விடயம் என்னெவெனில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தோல்வி கண்ட முன்னாள் நிறைவேற்று  ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ச இம்முறை பிரதமர் பதவியை இலக்கு வைத்து குருநாகலையில் போட்டியிடும் விடயமே.

மற்றது தமிழ்  கூட்டமைப்பு ஒரு பேரம் பேசும் சக்தியாக மாறக் கூடிய நிலையொன்று உள்ளது. அமையப் போகின்ற ஆட்சியில் தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள்  இரண்டும் சேர்ந்து அல்லது தனித்தனியாக ஆட்சிப்பங்காளியாக உருவெடுக்கும் நிலை வரலாம்.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்னை கிடைக்காது என்று தெரிகிறது.ஆனாலும் ஏராளமான பணப்பட்டுவாடா சில இடங்களில் நடைபெற்று வருகின்றது.

ஐ.தே.க.         93-95 இடங்களையும் போனஷ்  ஆசனம் இல்லாமல்                               ஐ.ம.சு.கூ.        74-76 இடங்களையும் போனஷ்  ஆசனம் இல்லாமல்                             தமிழ் கூட்டமைப்பு  15-16 இடங்களையும் போனஷ்  ஆசனத்துடன்                           ஜே.வி.பி         10-11 இடங்களையும் போனஷ்  ஆசனத்துடன்                                         சரத் பொன்சேககா   2   இடங்களையும்  பெறலாம் என்றுஎதிர்பாக்கப்படுகின்றது.               மிகுதி ஆசனங்கள்  சிறிய கட்சிகளுக்கு  கிடைக்கின்றது. மு.கா. சின் மரச்சின்னம் மற்றும் மயில் சின்னம் போன்ற  சிறிய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனம் பெறும்.
யாருக்கும் இங்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தேர்தல் முடிந்தவுடன் மஹிந்த ராஜபக்ச ஆட்சி அமைக்க ஆசைப்பட்டு தமிழ்  கூட்டமைப்புத் தலைவர் சம்மந்தன் மற்றும் ஜே.வி.பி தலைவர் அனுருகுமார திசாநாயகாவுடனும் ஆகியோர்களுடன் மஹிந்தர் தொடர்பு கொண்டு ஆட்சி அமைப்பது சம்மந்தமாகவும் தனக்கு ஆதரவு வேண்டியும் பேசவுள்ளதாக ஒரு இரகசியத் தகவல் தெரிவிக்கின்றது. ஆனாலும் தமிழ் கூட்டமைபப்பைப் பொறுத்த மட்டில் எந்தவொரு நிலையிலும் மஹிந்தருக்கு ஆதரவளிக்காது என்பது மட்டும் உண்மை. 

அம்பாரை மாவட்டம்

எதிர்பார்க்ப்படும் செல்லுபடியான வாக்குகள்.340.000 ஒரு எம்பிக்குத் தேவையான ஆகக் குறைந்த வாக்குகள் சுமார் 57 ஆயிரம்  வாக்குகள் தேவைப்படும். இங்கு 6101ஸ்ரீ7 எம்பிக்கள் கொண்டது.  அந்த வகையில் ஐ.தே.க. ஆகக் கூடுதலாக 115.000 ஆயிரம் வாக்குகள் பெறலாம். காரணம் அம்பாரையில் முஸ்லிம்  காங்கிரஸ் ஐ,தே.கட்சியின் யானைச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுகின்றது, ஐ.மு.சு.கூ.105.000 வாக்குகள் பெறலாம்.தமிழ் கூட்டமைப்பு 54.000 வாக்குகளும் மயில் சின்னம் 34.000 வாக்குகளையும் பெறும் நிலையுள்ளது.

ஐ.தே.க.2101ஸ்ரீ-3 ,ஐ.மு.சு.கூ -2. ,தமிழ் கூட்டமைப்பு -1 ,மயில் சின்னம் -1 பெறும் நிலை உள்ளது. மயில் சின்னத்திற்கு வாக்களிப்பு வீதம் குறையுமானால் அத்துடன் 5 வீத வெட்டுப்புள்ளியில் பாதிப்பு வருமனால் ஐ.தே.க. 4 ஆசனம் பெறும் .அனால் அம்பாரை மாவட்டத்தில் சிங்கள முஸ்லிம் வேட்பாளர்களிடத்தில் அதிகளவு மனாப்பை போட்டியுள்ளதால் யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களிடத்தில் பாரிய சிக்கல் உள்ளது. இதேவேளை வெற்றிலைச் சின்னத்திக்கு சுமார் 8 ஆயிரம் வாக்குகள் அதிகரித்து மயில் சின்னத்துக்கு வாகக்ளிப்பு வீதம் அதிகரிக்குமானால் வெற்றிலை போனஷ் ஆசனத்தக் கைப்பற்றக் கூடிய நிலையுள்ளது. இங்கு சராசரியாக 70 வீதமான வாக்களிப்பை எதிர்பார்க்கலாம். அதிலும் விசேடமாக அம்பாரை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் 70 வீதமான வாக்களிப்பை காணலாம். ஆனால் தமிழ் பகுதிகளில் 56 விதமான வாக்களிப்புதான் நடைபெறலாம். அம்பாரை மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பாக தயாகமகே. தயாரட்ன ஆகியோரும்  வெற்றிலை சார்பாக அதாவுல்லாவும்,விமலவீர திசாநாயகவும்  வெற்றியடையும் நிலையுள்ளது.                

மட்டக்களப்பு மாவட்டம் 

எதிர்பார்க்ப்படும் செல்லுபடியான வாக்குகள். 240.000 ஒரு எம்பிக்குத் தேவையான ஆகக் குறைந்த வாக்குகள் சுமார் 60 ஆயிரம்  வாக்குகள் தேவைப்படும். இங்கு 4101ஸ்ரீ5 எம்பிக்கள் கொண்டது. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டடைப்பு ஆகக் கூடுதலாக 135.000 ஆயிரம் வாக்குகள் பெறலாம் .ஐ.தே.க. 32.000 ஐ.மு.சு.கூ..30.000 வாக்குகள் பெறலாம்.முஸ்லிம் காங்கிரஸ்-23.000,சுயேட்சைக் குழுக்கள் சுமார் 20.000 ஆயிரம் பெறலம். காரணம் இலங்கையில் மிகவும் நீளமான வாக்கு சீட்டு மட்டக்களப்பில்தான் அமைந்துள்ளது. காரணம் தமிழ் மக்களின் வாக்கைச் சிதறவைக்க வாக்குச் சிதறலை உருவாக்க, தமிழ் வாக்கைப் பிரிக்க, தமிழ் மக்களின் வாக்குகள் தமிழ் கூட்டமைப்புக்கு அளிக்கப்படுவதைத் தடுக்க 32 சுயேட்சக் குழுக்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. அதன் மூலமாக தமிழ் கூட்டமைப்புக்குச் சொந்தமான சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை இந்த சுயேட்சைக் குழுக்கள் பிரிக்கின்றது. அதனால் தமிழ் கூட்டமைப்பின் மட்டக்களப்பில் தனது ஒரு எம்பி ஆசனத்தை இழக்கின்றது. மற்றும் ஐ.தே.க. மற்றும் மஹிந்தர் அணி கொண்ட வெற்றிலைச் சின்னம் (ஐ.ம.சு.கூ) ஆகிய இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் சுமார் 15 ஆயிரம் தமிழ் வாக்குகளைப் பிரிக்கின்றது. இங்கு  பிரதான கட்சிகளாக தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ்.ஐ,தே.க.மற்றும் மஹிந்தர் அணி கொண்ட ஐ.மு.சு.கூ .ஆகிய கட்சிகள் தனித்தனியாக மோதுகின்றன. தமிழ் கூட்டமைப்பு 150.000 க்கும் அதிகமான வாக்குகள் பெறுமானால் கூட்டமைப்பு 4 எம்பிக்கள் பெறலாம். தமிழ் கூட்டமைப்பு 2101ஸ்ரீ3, ஐ.தே.க.-1 ,ஐ.மு.சு.கூ-1 , இங்கும் அம்பாரை போன்று முஸ்லிம் பகுதிகளில் 67 வீதமான வாக்களிப்பையும் தமிழ் பகுதிகளில் 57 வீதமான வாக்களிப்பையும் எதிர்பார்க்கலாம். மட்டக்களப்பில் கூட்டமைப்பு  சார்பாக பொன்.செல்வராஜா மற்றும் புதியவர் ஓய்வு பெற்ற கல்வியதிகாரி ஸ்ரீ.நேசன்  ஆகியோரும்  வெற்றிலை  சார்பாக ஹிஸ்புல்லாவும் .ஐ.தே.க. சார்பாக அமீர் அலியும் வெற்றியடையும் நிலையுள்ளது. பிள்ளயானுக்கு மஹிந்தர் சார்பாக தேசியப் பட்டியல் எம்.பி.வழங்கப்படவுள்ளது. வெற்றிலையில்  ஹிஸ்புல்லா வெற்றியடையவில்லையென்றால் மு.கா சார்பாக அலி ஸாஹீர் மௌலானா வெற்றி பெறலாம்

திருகோணமலை மாவட்டம்

எதிர்பார்க்ப்படும் செல்லுபடியான வாக்குகள்.175.000 ஒரு எம்பிக்குத் தேவையான ஆகக் குறைந்த வாக்குகள் சுமார் 58 ஆயிரம்  வாக்குகள் தேவைப்படும். இங்கு 3101ஸ்ரீ4 எம்பிக்கள் கொண்டது. இங்கு ஐ,தே.க.யும் மு.கா.கட்சியும் இணைந்து யானைச் சின்னத்தில் போடட்டியிடுகின்றன. மற்றும் பிரதான கட்சிகளான தமிழ் கூட்டமைப்பு  ஐ.ம.சு.கூ.ஆகியன போட்டியிடுகின்றன

அந்த வகையில் ஐ.தே.க. ஆகக் கூடுதலாக 70 ஆயிரம் வாக்குகளும் தமிழ் தேசியக் கூட்டடைப்பு ஆகக் கூடுதலாக 51.000 ஆயிரம் வாக்குகள் பெறலாம் ஐ.மு.சு.கூ..40.000 வாக்குகள் பெறலாம். ஜே.வி.பி.கிண்ணியா ஒட்டகம் சரத் பொன்சேகா மற்றும் சுயேட்சைக்  குழுக்கள் 13.000 வாக்குகள் பெறலாம். இங்கு தமிழ் கூட்டமைப்பும் மஹிந்தவின் ஐ.ம.சு.கூ.கட்சியும் தங்களின் வாக்கு வீதத்தை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. அப்படியான  நிலை உருவானால் ஐ.தே.க. யின் 70 ஆயிரம் என்ற வாக்கு அதிகரிக்கலாம். அதாவது இங்கு எதிர்பாா்க்கப்படும் செல்லுபடியான 175.000 வாக்குகள் என்பது 180.000 என்று அமையுமானால் ஐ.தே.க.மற்றும்.வெறறிலைகக்hன வாக்குகள் சற்று அதிகரிக்கலாம். இந்த அதிகரிப்பு என்பது 3 பிரதான கட்சிகளுக்கும் தலா 1000 வாக்குகள் வீதம் அதிகரிக்கலாம்..

ஐ.தே.க.-1101ஸ்ரீ2, தமிழ் தேசியக் கூட்டமைப்பு -1,ஐ.மு.சு.கூ-1 என்ற எம்பிக்களைப் பெறுகின்றது.இங்கு கொள்கை ரீதியாக தமிழ் முஸ்லிம் இனஉறவை முன்நோக்கி முஸ்லிம் மக்களின் 8000 வாக்குகள் தமிழ் கூட்டமைப்புக்கு  கிடைக்குமானால் கூட்டமைப்பு 2 எம்பியைப் பெறலாம் .அதற்கான நல்ல அருமையான வாய்ப்பொன்று மூதூரில் இருந்து வந்த போதும் அந்த வாய்ப்பு கைநழுவிப் போய் விட்டது.

இங்கு வாக்களிப்பு வீதம் குறையுமனால் ஐ.தே.க.யின் 70 ஆயிரம் வாக்குகள் என்பது சற்றுக் குறையலாம்.அதே போன்று தமிழ் கூட்டமைப்பின் 52000 வாக்குகள் சற்றுக் குறையலாம்.மற்றும் ஐ.ம.சு.கூட்டமை;பின் வெற்றிலைச் சின்னத்தின்  40.000 வாக்குகள் இன்னும் 2000 வாக்குளாக அதிகரிக்கலாம்.காரணம் திருகோணமலை.கந்தளாய்.சேருவில ஆகிய பகுதிச் சிங்கள மக்களின்  மஹிந்தவுக்கான ஆதரவு இன்னும் குறையவில்லை.இங்கு 70 வீதமான முஸ்லிம் மக்களின் வாக்களிப்பையும் 52 வீதமான தமிழ் மக்களின் வாக்குப் பதிவையும் எதிர்பார்க்கலாம்.எப்பொழுதும் தமிழ் பகுதிகளில் எந்தத் தேர்தல் நடந்தாலும்  வாக்களிப்பு வீதம் என்பது சற்று மந்த நிலைதான் காணப்படுவது வழமையான செயல்தான்.திருமலையில் கூட்டமைப்பு சார்பாக சம்மந்தன்.வெற்றிலை சார்பாக சுசந்த புஞ்சிநிலமேவும்.யானையில் போட்டியிட்ட கிண்ணியா சின்ன மஹ்றூப் வெற்றி பெறும் நிலையுள்ளது. யானை சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிட்ட ஐ.தே.க வேட்பாளர் இம்ரானுக்கும் மு.கா வேட்பாளர் தௌபீக் ஆகிய இருவருக்கும் கடும் மனாப்பை போட்டி இடம்பெறும்.இருவரில் ஒருவர்  இரண்டாவது ஆசனத்தை பெற்று வெற்றி பெறுவார். இங்கு வெற்றி என்பது பெரிய இடைவெளி  இல்லாது சுமார் 1000-2000 மனாப்பை வித்தியாசத்தில் போட்டியும் வெற்றியும்  அமையும்.

வடக்கு மாகாணம்

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் பிரிவுகளைக் கொண்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 எம்பிக்களையும் வன்னி வாவட்டத்தில் 6 எம்பிக்களுமாக 13 எம்பிக்கள் கொண்டது.இதில் முஸ்லிம் எம்பி என்று 1 அல்லது 2 மற்றும் தமிழ் கூட்டமைப்பு இல்லாத ஆசனம் என்று ஆகக் கூடியது 2 ஆசனம் போக 9-10 எம்பிக்கள் தமிழ் கூட்டமைப்பு சார்பாக கிடைக்கலாம்.கிழக்கில்-5  ஆசனம் கிடைக்கும்.

கிழக்கில்  திருகோணமலை-1,மட்டக்களப்பு-3.அம்பாரை-1 அடங்கலாக  5 ஆசனங்கள்தான் கிடைக்கும்.மற்றும் கூட்டமைப்பின்  வட கிழக்கு தழுவிய தேசியப் பட்டில் -1 (இதில் தமிழ் மக்களின்  வாக்குகள் அதிகரிக்குமானால் 2 எம்பி  கிடைக்கவும்  வாப்புள்ளது.)  அப்படியான  ஒரு  வாய்ப்பு  2004 ஆம் ஆண்டு  வந்தது. மொத்தமாக 15-16 எம்பிக்களைப் பெற்ற மூன்றாவது சக்தியாக தழிழ் கூட்டமைப்பு  அமையும்.அமையப் போகின்ற நாடாளுமன்றத்தில் தமிழ் கூட்டமைப்பு ஒரு பேரம் பேசுகின்ற சக்தியாக ஆட்சிப் பங்காளியாக மாறக் கூடிய மிக அதிக வாய்ப்புள்ளது.

சிலவேளை ஐ.தே.க. வுக்கு ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்பு அல்லது ஜே.வி.பி.அல்லது கூட்டமைப்பின் ஆதரவு அல்லது இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவு தேவைப்படலாம்.ஆட்சிக்கு தமிழ் கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்பட்டால் அமையப் போகின்ற அரசுக்கு வெயியில் இருந்து கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்று வைக்;கப்படலாம். 

இந்த பொதுத் தேர்தலின் பின்னர் தமிழர் தரப்புக்கு ஒரு சிறிய தீர்வையாவது பெற்றுத் தரலாம் என்று பரவலாக எதிர்பார்கப்படுகின்றது.
-எம்.எம்.நிலாம்டீன்-                                                                                                               mmnilamuk@gmail.com


avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :