Featured Home (TOP)

Recent Comments

Saturday, August 1, 2015

avathani Media Network

தேர்தல் சட்டத்தை மீறிய 203 பேர் கைது ;பொலிஸ் தலைமையகம் தகவல்

தேர்தல் சட்­டங்­களை மீறி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் 203 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் அறி­வித்­துள்­ளது.
தேர்தல் சட்ட மீறல் சம்­ப­வங்கள் தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்­திற்கு கிடைக்­கப்­பெற்ற 86 முறைப்­பா­டு­க­ளுக்­க­மைய சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வதா­கவும் பொலிஸ் தலை­மை­யகம் அறி­வித்­துள்­ளது.
அத்­துடன் மாத்­தறை அக்­கு­ரஸ்ஸ பகு­தியில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் இருவர் சுவ­ரொட்­டி­களை ஒட்டிக் கொண்­டி­ருக்கும் போது அவ் விடத்­திற்கு கெப் வாகனம் ஒன்றில் வந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வா­ளர்கள் இவ் இரு­வ­ரையும் கடத்திச்சென்ற சம்­பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு அறி­வித்­துள்­ளது.
இச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய 06 இளை­ஞர்கள் தொடர்­பிலும் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் ஊட­கப்­பி­ரிவு அறி­வித்­துள்­ளது.
மட்­டக்­க­ளப்பில்
இதே­வே­ளை மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி மற்றும் ஆரை­யம்­பதி பகு­தி­களில் தேர்தல் சட்­டங்­களை மீறும் வகையில் வேட்­பா­ளர்­களின் உரு­வப்­ப­டங்­களை கொண்ட சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டுள்­ள­தாக பெப்ரல் அமைப்பின் காத்­தான்­குடி மற்றும் ஆரை­யம்­பதி பிர­தே­சங்­க­ளுக்­கான இணைப்­பாளர் எம்.ஐ.எம்.ஹரீஸ் தெரி­வித்தார்.
இது தொடர்பில் பொது­மக்கள் சிலர் தமது அமைப்­புக்கு முறைப்­பா­டு­களை செய்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
இப் பிர­தே­சங்­களில் வீடு வீடாக பிர­சா­ரத்­துக்கு செல்லும் வேட்­பா­ளர்­களின் ஆத­ர­வா­ளர்கள் வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளிடம் அனு­மதி பெறாமல் வேட்­பா­ளர்­களின் தேர்தல் பிர­சார சுவ­ரொட்­டி­களை வீட்­டுச்­சு­வர்­களில் ஒட்­டு­வ­தா­கவும் சிலர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்த அவர் இது தவிர இப்பிரதேசங்களில் பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :