NFGG ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்று நேற்று 9ம் கிளை சந்தியில் இடம்பெற்றது.
நிறைந்த சனத் திரளுடன் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய செயற்குழு உறுப்பினர் KM.புஹாரி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான PM.முஜிபுர் ரஹ்மான், பொறியியலாளர் MM.பழுலுல் ஹக் ஆகியோர் உரையாற்றியதுடன் விஷேட உரையாற்றினார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளருமான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான்.