Featured Home (TOP)

Recent Comments

Saturday, August 1, 2015

avathani Media Network

கிழக்கு ஊடக சங்கத்திற்கும் 'தாய்வீடு' கையளிப்பு! மட்டு. அரச அதிபர் பாராட்டு!!

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)


தமிழ் சி.என்.என். இணையதள நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள 'தாய் வீடு' பத்திரிகையின் ஒரு தொகுதி, கிழக்கு ஊடக சங்கத்திற்கும் கையளிக்கப்பட்டது.

கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், கல்முனையில் அமைந்துள்ள தமிழ் சி.என்.என். கிழக்கு மாகாண அலுவலகத்தில் நேற்று (31) வெள்ளிக்கிழமை அலுவலகப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வியிடமிருந்து இதனைப் பெற்றுக் கொண்டார்.

இதன்போது, கிழக்கு ஊடக சங்கம் வெளியிட்டு விநியோகித்து வரும் பொதுமக்களுக்கான தகவல் அறியும் உரிமை மற்றும் முறைகேடான தேர்தல் நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான பிரசுரமும் தமிழ் சி.என்.என். கிழக்கு மாகாண அலுவலகப் பொறுப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

கிழக்கு ஊடக சங்கத்தின் செயலாளர் வீ. பத்மசறீ, பொருளாளர் எஸ். சச்சுதானந்தகுமார் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர் லோ. தினேஷ்ராஜ் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இப்பத்திரிகையின் பிரதியொன்றினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அம்மையாரிடம் கிழக்கு ஊடக சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று மாலை அவரது வாசஸ்தலத்திற்குச் சென்று நேரில் கையளித்தனர்.

பத்திரிகையை மிக ஆர்வத்துடன் பார்வையிட்ட மாவட்ட அரசாங்க அதிபர், மிக நேர்த்தியான முறையிலும், பொதுத் தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் தமிழ் மக்களுக்கு காத்திரமான அரசியல் கருத்துக்களை முன்வைத்தும் 'தாய் வீடு' பத்திரிகை வெளியிடப்பட்டிருப்பதாக கிழக்கு ஊடக சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.



avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :