(அபூநிதா)
பல வருடங்களாக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த காத்தான்குடி ஊர்வீதியின் அபிவிருத்தி வேலைகள் தற்போது மிகவும் துரிதமாக நடைபெற்று வருகின்றது.
மிகவும் நெருக்கமாக போக்குவரத்திற்கு கஸ்டமாக காணப்பட்ட இவ்வீதி அகலமாக்கப்பட்ட நிலையில் வடிகாண்களும் சேர்ந்ததாக தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
பழைய கல்முனை வீதி என்று அழைக்கப்படும் தற்போதைய ஊர்வீதி பல வருடங்களுக்கு முன்னால் காத்தான்குடியின் பிரதான வீதியாகவும் இருந்து வந்திருக்கிறது.
இந்த வீதியின் ஊடாக ஆரையம்பதி, மன்முனை, மற்றும் கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களுக்கு பஸ்சேவை இடம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டு வரும் இந்த வீதியின் ஊடாக இனிவருங்காலங்களில் மக்கள் சிரமமின்றி பயணம் செய்யக்கூடியதாக இருக்கும்




