Featured Home (TOP)

Recent Comments

Sunday, August 30, 2015

avathani Media Network

நிந்தவூரில் அதிகரித்து வரும் திருடர்கள் . பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

(முஹம்மட் ஜெலீல், நிந்தவூர் )

நிந்தவூர்-9ம் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று நல்லிரவு மணியளவில்  வீட்டார்கள் ஆழ்ந்த தூக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்தபோது திருடன் ஒருவன் திருட்டுத்தனமாக புகுந்து வீட்டினுள்ளிருந்த பீரோவை உடைக்க முற்பட்டபோது தூக்கத்திலிருந்த வீட்டுப் பெண் திடுக்கிட்டு எழுந்ததும்  திருடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

பின்னர் அயல் வீட்டார்களுக்கு தொலைபேசிமூலம் அழைப்புவிடுத்த போது  அயலவர்கள் உடனே வந்து திருடனை பிடிக்க அப் பிரதேசத்தில் தேடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மேலும் மூன்று வீடுகளில் பணம் மற்றும் எலக்ட்ரிக் பொருட்களை திருடிச் சென்றமை தெரியவந்தது.


மேலும் இது தொடர்பாக அப் பிரதேச மக்கள் திருடிச்சென்ற வீடுகளில் வினாவிய போது அவ்வீட்டார்கள் ஒவ்வொருவரும் திருடனை சாடைமாடையாக கண்டவர்கள் திருடனின் தோற்றம் தொடர்பாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோற்றத்தினை கூறியுள்ளனர் இதைவைத்து பார்க்கும் போது திருடர்கள் கும்பல்களாக வந்து வெவ்வேறு வீடுகளில் தனித் தனியாகச் சென்று திருடிச் சென்றிருக்கலாமென சந்தேகங்கள் எழுந்துள்ளன.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :