கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப் பாதை மற்றும் தெற்கு அதிவேகப் பாதை உட்பட நாட்டிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் எதிர்வரும் 17 ஆம் திகதி இலவசமாக பயணிக்கலாம் என நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே 17 ஆம் திகதி காலை 6 மணித்தொடக்கம் மாலை 6 மணிவரை அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க முடியும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
