Featured Home (TOP)

Recent Comments

Tuesday, August 11, 2015

avathani Media Network

சம்பிக்கவின் புத்தகத்தை கிழித்து தீயிட்டு கொளுத்திய அஸ்வர்

அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இஸ்­லாத்­தையும், முஸ்­லிம்­க­ளையும் அடிப்­படை வாதி­க­ளாகச் சித்­தி­ரித்து எழுதிய அல்–­ஜிஹாத் அல்–கைதா எனும் புத்­த­கத்தை கிழித்து தீயிட்டு கொளுத்­திய முன்னாள் முஸ்லிம் விவ­கார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் அப்­புத்­த­கத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தடை­செய்ய வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்தார்.

நேற்­றுக்­காலை பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள பர்ல் கிராண்ட் ஹோட்­டலில் நடை­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அஸ்வர் குறிப்­பிட்ட வேண்­டு­கோளை விடுத்தார்.
அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க எழு­த­ியுள்ள அல்–­ஜிஹாத், அல்–­கைதா என்ற புத்­த­கத்தில் இலங்­கையில் குர்ஆன் மத­ர­சாக்­களும் அரபு கல்­லூ­ரி­களும் அஹ­திய்யா பாட­சா­லை­களும் பல்­க­லை­க்க­ழ­கங்­களின் இஸ்­லா­மிய பீடங்­க­ளும் இஸ்­லா­மிய தீவிர வாதத்தை போதிப்­ப­தா­கவும் இவ் விட­யங்­க­ளி­லி­ருந்து தான் முஸ்லிம் அடிப்­படை வாதம் பரப்­பப்­ப­டு­வ­தா­கவும் கூறி­யுள்ளார்.
அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை, தௌஹீத் ஜமாஅத் போன்ற இஸ்­லா­மிய நிறு­வ­னங்கள் அடிப்­படை வாதத்­திற்கு துணை­போ­வ­தா­கவும் கூறி­யுள்ளார். இவ்­வி­யக்­கங்கள் சமா­தா­னத்­தையும், நல்­லொ­ழுக்­கத்­தையுமே போதிக்­கின்­றன என்­பதை சம்­பிக்க அறி­யா­தி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­யது. குர்ஆன் பாட­சா­லைகள் உரு­வா­கு­வ­தற்கு கார­ண­மாக இருந்­தவர் இன்­றைய அமைச்சர் கபீர்­ஹா­ஷிமின் அப்பா இப்­ராஹிம் என்­ப­வ­ராவார். குர்ஆன் மத­ர­ஸாக்­களைப் பற்­றிய தவ­றான கருத்­துக்­களை தெரி­வித்­துள்ள சம்­பிக்க ரண­வக்க இப்­போது ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் கூட்டுச் சேர்ந்­துள்ளார். இந்­நி­லையில் இது பற்றி அமைச்சர் கபீர் ஹாஷிம் என்ன சொல்­கிறார் என்­பதை தெளிவுப்­ப­டுத்த வேண்டும்.
இதே­வேளை ஒலுவில் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழகம் மறைந்த தலைவர் அஷ்­ரபின் ஏற்­பாட்­டிலேயே ஆரம்­பிக்­கப்­பட்­டது. அங்கு இஸ்­லா­மிய பிரிவு இயங்­கு­கி­றது என்­றாலும் அங்கு சிங்­கள, தமிழ் மாண­வர்­களும் உயர்­கல்வி பெறு­கி­றார்கள்.
இந்­நி­லையில் தற்போது அமைச்சர் சம்­பிக்­க­விடம் கூட்டு சேர்ந்­துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதற்கு என்ன சொல்­கிறார். பல்­க­லை­க்க­ழக இஸ்­லா­மிய பீட­ங்­களில் தீவி­ர­வாதம் போதிக்­கப்­ப­டு­கி­றதா? சம்­பிக்­கவின் கூற்றை அவர் ஏற்றுக் கொள்­கி­றாரா என்­பதை நாட்டு மக்­க­ளுக்கு தெளிவு­ப்ப­டுத்த வேண்டும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கொள்கைகளைக் கொண்டவர்கள் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்? கலிமா சொன்ன முஸ்லிம்கள் இவ்வாறானவர்கள் ஒற்றிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.
source - virakesary

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :