Featured Home (TOP)

Recent Comments

Monday, August 10, 2015

avathani Media Network

கல்முனை நவீன நகராக அபிவிருத்தி சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை - பிரதமர் ரணில்

கல்­மு­னையை மிகவும் நவீன முறையில் அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். நாட்­டி­லுள்ள முக்­கிய நக­ரங்­களில் ஒன்­றாக கல்­மு­னையை மாற்­றுவோம். அத்­தோடு, சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­திற்கு தனி­யா­ன­தொரு பிர­தேச சபையை உரு­வாக்­குவோம்.

இவ்­வாறு நேற்று மாலை 05.30 மணி­ய­ளவில் கல்­முனை சந்­தாங்­கேணி மைதா­னத்தில் நடை­பெற்ற தேர்தல் பிரச்­சாரக் கூட்­டத்தில் பிர­தம மந்­திரி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

கல்­முனை மாந­கர சபையின் மேயர் நிஸாம் காரி­யப்பர் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்­திற்கு பெருந்­தி­ர­ளான பொது மக்கள் கலந்து கொண்­டார்கள். இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
நாங்கள் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒற்­று­மைப்­பட்டு வாக்­க­ளித்தன் மூல­மாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெற்றி பெறச் செய்தோம். இன்று நாட்டில் நல்­லாட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

முத ரீதி­யாக மேற் கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் இல்­லாமல் செய்­யப்­பட்­டுள்­ளன. எல்­லோரும் இலங்­கையர் என்ற ரீதியில் சாதி, மத பேதங்கள் இன்றி ஒற்­று­மை­யுடன் வாழ்­வ­தற்­கு­ரிய சூழல் ஏற்­பட்­டுள்­ளது. மத உரி­மைகள் பாது­காக்­கப்­பட்­டுள்­ளன. 




ஆயினும், இன்று மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ இன­வாதம் பேசிக் கொண்­டி­ருக்­கின்றார். இன­வாதம் பேசி அர­சியல் செய்ய வேண்­டிய தேவை எமக்­கில்லை. மஹிந்­தவை துரத்தி அடிப்­ப­தோடு, இன­வா­தத்­தையும் முற்­றாக ஒழிக்க வேண்டும்.

இதற்­கா­கவே ஐ.தே.கவின் யானைச் சின்­னத்­திற்கு வாக்­க­ளிக்­கு­மாறு கேட்­கின்றோம். நிம்­ம­தி­யுடன் சகல இனங்­களும் ஒற்­று­மை­யுடன் வாழ்­வ­தற்கு ஐ.தே.கவுக்கு வாக்­க­ளிக்க வேண்டும்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒற்­று­மைப்­பட்­ட­தனைப் போன்று ஹெல­உ­று­மய, மலை­யக தமிழ் மக்கள், முஸ்லிம்  மக்கள் எல்­லோரும் எங்­க­ளுடன் இணைந்­துள்­ளார்கள். அவர்­களின் கட்­சி­களும் எம்­முடன் உள்­ளன. இந்த ஒற­று­மை­யுடன் ஐ.தே.கவின் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும்.

இலங்­கையில் முத­லீடு செய்­வ­தற்கு வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் வரி­சையில் நின்று கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அவர்கள் ஐ.தே.கவின் ஆட்சி வேண்­டு­மென்று கேட்­கின்­றார்கள். 10 இலட்சம் வேலை வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். 

கல்­முனை  நக­ரையும், அதனை சூழ உள்ள பிர­தே­சத்தை நவீன முறையில் அபி­வி­ருத்தி செய்து கல்­மு­னையை பாரிய அபி­வி­ருத்­தியை கொண்ட நக­ர­மாக மாற்­றுவோம். அத்­தோடு, ரவூப் ஹக்­கீமும், கரு­ஜ­ய­சூ­ரி­யவும் பேசி எடுத்­துள்ள முடி­வுக்கு அமைய  சாய்ந்­த­ம­ருது மக்­களின் நீண்ட கால கோரிக்­கை­யா­க­வுள்ள சாய்ந்­த­ம­ரு­திற்­கான பிர­தேச சபையை ஏற்­ப­டுத்­துவோம். 

மகா­வலி ஏ மற்றும் பி வல­யங்­களில் 16 ஆயிரம் ஹெக்­டயர் ஏக்­கரில் வேளாண்­மையை செய்­வ­தற்கும் தீர்­மா­னித்­துள்ளோம். 

இவ்­வாறு இனங்­க­ளுக்கு இடையே ஒற்றுமை, நல்லாட்சி, தொழில் வாய்ப்பு, வெளிநாட்டு முதலீடு, இனவாதத்தை ஒழித்தல் போன்றவைகளை மேற்கொண்டு புதியதொரு இலங்கையை உருவாக்குவோம். ஏன்றார். 

இக்கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் உட்பட அம்பாரை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்குளும் கலந்து கொண்டார்கள்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :