முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினமிரவு முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்தே இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
விசேடமாக அமைச்சர்கள் நியமனம், பதவியேற்பு நிகழ்வு , மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அமைச்சுக்கள் ஒதுக்கீடு குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
பாராளுமன்றத் தேர்தல் முடிந்து 10 தினங்கள் கடந்துள்ள நிலையிலும் புதிய அமைச்சரவை பதவியேற்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய தேசிய அரசாங்கத்தில் 45 பேர் கொண்ட அமைச்சரவையை அமைப்பது என்றும், அதில் 30 அமைச்சுக்கள் ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் 15 அமைச்சுப் பதவிகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருக்கம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுககு எவ்வாறான அமைச்சுப் பதவிகளை வழங்குவது என்பது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அமைச்சரவை பதவியேற்பு அடுத்தமாதம் 2ஆம் திகதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இழுபறிகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் நேற்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
