கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் புகையிரதத்தில் மோதி மட்டக்களப்பு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மட்டக்களப்பைச் சேர்ந்த சிவலிங்கம் நிரோசன் என்ற 28 வயது இளைஞரே உயிரிழந்தார்.
மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி படுகாயமடைந்த அவர், கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிவலிங்கம் நிரோசன் மட்டக்களப்பில் இருந்து வெளியான பல்வேறு கலைப்படைப்புகளின் பின்னணியில் செயற்பட்டுள்ளதுடன், பல குறுந்திரைப்படங்களையும் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source - ttnnews
Source - ttnnews
